Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பொய் தகவல்கள் மூலம் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை சிதைக்க முயற்சி!" Ex நீதிபதிகள் பரபர கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் இப்போது நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையைச் சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக 21 ஓய்வுபெற்ற நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

எந்தவொரு நாட்டிற்கும் ஜனநாயகத்தைக் காப்பதில் நீதித்துறைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. மிகப் பெரிய அரசியல் தலைவர்களுக்கும் கூட நீதிமன்றங்கள் தான் கடிவாளம் போடும். நமது நாட்டிலும் கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

Attempts To Undermine Judiciary Retired Judges Write To Supreme Court CJI Chandrachud

இதற்கிடையே தவறான தகவல்கள், அழுத்தம், அவமதிப்பு மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற 21 நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

21 நீதிபதிகள் கடிதம்: அரசியல் நலன்கள் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களால் நீதித்துறையைச் சிலர் விமர்சிப்பதாகச் சாடியுள்ளனர். நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 4 நீதிபதிகள் உள்ளிட்ட 21 முன்னாள் நீதிபதிகள் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

எதற்காக இந்த கடிதம்: அதேநேரம் அவர்கள் எந்தவொரு சம்பவத்தையும் தங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஊழல் வழக்குகளில் சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் நடக்கும் நிலையில், இந்த கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர். ஒரு பக்கம் ஆளும் தரப்பு, ஊழல் தலைவர்கள் நீதித்துறையைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்புவதாகச் சாடியுள்ளனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் பல தலைவர்களுக்கு ஜாமீன் கூட உரிய நேரத்தில் நீதிமன்றம் தரவில்லை என்று விமர்சித்து இருந்தனர்.

நீதிபதிகள் மீது அவதூறுகளைக் கூறுவதன் மூலம் நீதித்துறை செயல்முறைகளைத் திசைதிருப்ப இந்த முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் மேலும் கூறுகையில், "இதுபோன்ற செயல்கள் நமது நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பது மட்டுமின்றி, சட்டத்தின் பாதுகாவலர்களாக, சட்டத்தை நிலைநிறுத்த உறுதிமொழி எடுத்துள்ள நீதிபதிகளின் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற கொள்கைகளைச் சவால் செய்வதாக இருக்கிறது.

நற்பெயரைக் கெடுக்க: நீதித்துறையின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அடிப்படையற்ற உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவது முதல் நீதித்துறை முடிவுகளை எப்போதும் ஒரு தரப்பிற்குச் சாதகமாக மட்டுமே வருவது போலக் காட்டுவது என்று பல்வேறு யுக்திகளை இவர்கள் கையாள்கிறார்கள். இது கவலையளிப்பதாகவே இருக்கிறது.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் இதைச் செய்கிறார்கள். சில நேரங்களில் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கூட இதைச் செய்கிறார்கள். நீதித்துறை சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

தவறான தகவல்கள்: குறிப்பாகத் தவறான தகவல்கள் மூலம் பொதுமக்களின் உணர்வுகளை இவர்கள் நீதித்துறைக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார்கள்.. தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் நீதித்துறை முடிவுகளைப் பாராட்டிவிட்டு, அதே சமயம் தங்களுக்கு எதிராக வரும் போது அதைக் கடுமையாக விமர்சிப்பது என்பது நீதித்துறையின் அடிப்படையையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிப்பிடுவதாக இருக்கிறது.

இத்தகைய அழுத்தங்களுக்கு எதிராக நீதித்துறை வலுப்படுத்த வேண்டும்.. சட்ட அமைப்பின் புனிதம் மற்றும் சுயாட்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறை ஜனநாயகத்தின் தூணாக, அரசியல் விருப்பு வெறுப்புகளில் இருந்து விலகி இருப்பது கட்டாயமாகும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+