முதுகெலும்பை உடைத்த இந்தியர்கள்! பாகிஸ்தான் ஆதரவால் துருக்கி, அஜர்பைஜானுக்கு விழுந்த மரண அடி
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அஜர்பைஜானுக்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 70% குறைந்துள்ள நிலையில், துருக்கி செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கையும் சுமார் 40% வரை குறைந்துள்ளது. இதனால் அந்த இரு நாடுகளின் பொருளாதாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது.

கொந்தளிக்கும் இந்தியர்கள்
இது இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்லாமல் இந்தியர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இந்தியா வெளிப்படையாக எந்தவொரு தடையும் விதிக்கவில்லை.. இருப்பினும், அந்த இரு நாடுகளின் நிலைப்பாடுகள் இந்தியாவுக்கு எதிராக இருந்ததால் இந்தியர்கள் தாங்களாக முன்வந்து அந்த நாடுகளுக்குச் செல்வதைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், அஜர்பைஜானுக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 70% குறைந்துள்ளது. அதேபோல், துருக்கிக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 38% சரிந்துள்ளது.
புறக்கணிப்பு
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் காலகட்டத்தில் அஜர்பைஜானுக்கு வெறும் 20,631 இந்தியர்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 69,576 பேர் அஜர்பைஜான் சென்றிருந்த நிலையில், அது இந்தாண்டு அது 20,631ஆக குறைந்துள்ளது.
மாதம் வாரியாக தகவல்
- ஜூன் 2025 - 9,934 பேர் (கடந்த ஆண்டு 28,315 பேர்)
- ஜூலை 2025- 4,665 பேர் (கடந்த ஆண்டு 20,124 பேர்)
- ஆகஸ்ட் 2025- 6,032 பேர் (கடந்த ஆண்டு 21,137 பேர்)
அதாவது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மாதங்களில் 49,000 பேர் குறைவாக இரு நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர்.
துருக்கி
துருக்கியிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.. கடந்த ஆண்டு அங்கு 93,963 பேர் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த நிலையில், இந்தாண்டு அது 58,544ஆகக் குறைந்துள்ளது, இது 38% சரிவு ஆகும்.
- ஜூன் 2025- 24,250 பேர் (கடந்த ஆண்டு 38,307 பேர்)
- ஜூலை 2025- 16,825 பேர் (கடந்த ஆண்டு 28,875 பேர்)
- ஆகஸ்ட் 2025- 17,649 பேர் (கடந்த ஆண்டு 26,781 பேர்)
கடும் பாதிப்பு
இரு நாடுகளுக்குமே சுற்றுலா தான் பிரதான பிஸ்னஸாக இருந்தது. கணிசமான பொருளாதாரம் சுற்றுலாத் துறையில் இருந்தே வந்தது. இந்தியர்கள் கொடுத்த அடியில் இரு நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான்
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொடூரமாகக் கொன்றனர். அதற்குப் பதிலடியாக, மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது.. பாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டன.
இது அப்போது சிறிய மோதலாக வெடித்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கின. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்த நிலையில், இந்தியாவின் தாக்குதல்களைப் பாகிஸ்தானைத் திணறடித்தது. இதையடுத்து பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றுப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications