கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.. பல ஆண்டுகள் கழித்து உதவியா? பிரசாந்த் கிஷோர் பாய்ச்சல்
டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள உதவிகளைத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலையில் தாக்கம் மிக மிக மோசமாக இருந்தது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் வைரஸ் பரவல் மிக மோசமாக இருந்தது.
குறிப்பாக, கொரோனா உயிரிழப்புகள் இந்த ஆண்டு மிக மோசமாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

பிரதமர் அலுவலகம்
கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல உதவி திட்டங்களையும் அறிவித்துள்ளன. இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது முதல் மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். உயர் கல்வி பயில்வதற்கு உதவி அளிக்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயது ஆகும் போது, அவர்களுக்கு 10 லட்சம் வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
மத்திய அரசின் இந்த அறிவிப்பு கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்த அறிவிப்பைப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நக்கலாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில், "மோடி சர்க்காரின் மற்றொரு வழக்கமான மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்த முறை கொரோனாவை தவறாகக் கையாண்டதால் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கவனிப்பதற்கான நடவடிக்கை.

18 வயதில்
கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள் இப்போது மிகவும் தேவையான ஆதரவைப் பெறுவதற்குப் பதிலாக, அவர்கள் 18 வயதாகும்போது உதவித்தொகை அளிக்கிறார்கள். இதைக் குழந்தைகள் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பு மூலம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள கல்வியை வழங்கும் PM Cares-க்கு நன்றியுடன் இருங்கள்.

ஆக்சிஜன் இல்லை
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு செய்தால் 50 கோடி இந்தியர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என உறுதி அளித்த பிரதமர் அலுவலகத்திற்கு நன்றி. என்ன அவர்களில் தேவைப்படும்போது படுக்கை / ஆக்சிஜனை மட்டும் வழங்க முடியாமல் போனது" என்று கடுமையான விமர்சனங்கள் கிண்டல் செய்யும் தொனியில் பிரசாந்த் கிஷோர் முன் வைத்துள்ளார்.

நிதியுதவி
முன்னதாக, தமிழக அரசு சார்பிலும் குழந்தைகளுக்கு உதவச் சிறப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்படும். அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும். மேலும், உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications