முதலில் ஒப்புதல், பின்னர் சோதனை... இறுதிகட்ட கொரோனா சோதனைக்கு தயாராகும் கோவாக்சின்
டெல்லி: தனது கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம்கட்ட சோதனைக்கு தேவையான தன்னார்வலர்களைச் சேர்க்கும் பணி முடிந்துவிட்டதாகவும், விரைவில் சோதனை தொடங்கப்படும் என்றும் பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி
இந்தியாவிலும் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டியிருந்தாலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.

முதல் இரண்டு கட்ட சோதனை
இதற்கு விளக்கமளித்த அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, முதல் இரண்டு கட்ட சோதனைகளில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் மனிதர்களின் உடலில் தேவையான தடுப்பாற்றலை உற்பத்தி செய்கிறது என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், எங்களைப் போல ஒரு சர்வதேச நிறுவனத்தை விமர்சிப்பது சரி இல்லை என்றும் கூறினார்.

சோதனைக்குத் தயார்
மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், பாரத் பயோடெக் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை மேற்கொள்ள போதுமான ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலேயே இதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மூன்றாம்கட்ட சோதனைக்குத் தேவையான தன்னார்வலர்களைச் சேர்க்கும் பணி நிறைவடைந்ததாகவும், விரைவில் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கப்படும் என்றும் பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

அரசு விளக்கம்
மூன்றாம்கட்ட சோதனைக்கு முன்னர் கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, எய்ம்ஸ் இயக்குநர் இது குறித்து விளக்கமளித்திருந்தார். அதாவது, சீரம் நிறுவனத்திற்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும் ஒரே ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் சோதனை முறையில் கோவாக்சினை பயன்படுத்தவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து, சேமித்து வைக்கவும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் பணிகள்
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த வாரம் இதற்கான முதல் ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்து 460 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.03 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications