டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் பார்த்தவரை பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு எந்த பிரதமருக்கும் இருந்ததில்லை.. அமித்ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக பெருவாரியான வெற்றி கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Russia இந்தியாவின் True Friend என நிரூபித்த 4 தருணங்கள் | India Russia Friendship | Oneindia Tamil

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    வரும் 10 ஆம் தேதி 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவும் அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டனர்.

    போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.. உக்ரைன் அரசு போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.. உக்ரைன் அரசு

    பாஜக தோற்காது

    பாஜக தோற்காது

    அப்போது அவர்கள் கூறுகையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தோல்வியுறும் என நம்பிக்கையை வைத்திருந்தவர்கள் நிச்சயம் வேதனைக்குள்ளாவர். ஏற்கெனவே 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ள நிலையில் அங்கு பெருவாரியான வாக்குகளுடன் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும்.

    பிரதமருக்கு இருக்கும் செல்வாக்கு

    பிரதமருக்கு இருக்கும் செல்வாக்கு

    அறிவியல் பூர்வமாக நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டது பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்கள். அந்த தேர்தல் பிரச்சாரங்களில் நான் பார்த்த வரை, பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 மாநிலங்களிலும் இருக்கும் செல்வாக்கு இதுவரை எந்த ஒரு பிரதமருக்கும் இருந்ததில்லை. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு முன்பு வரை கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் பேப்பருடன் சரி.

    தேர்தல் வாக்குறுதிகள்

    தேர்தல் வாக்குறுதிகள்

    ஆனால் பாஜக ஆட்சியில் 92.6 சதவீத தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றிவிட்டோம். பிரதமர் மோடியை வாரணாசி மக்கள் வரவேற்ற விதத்தை பாரக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பு என்பிபி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவில்லாமல் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியை உருவாக்கும் மற்றொரு மாநிலமாக மணிப்பூர் விளங்கும்.

    பாஜகவுக்கு நம்பிக்கை

    பாஜகவுக்கு நம்பிக்கை

    வாரிசு அரசியலை காட்டிலும் செயல்பாட்டு அரசியலில் பாஜகவுக்கு நம்பிக்கை இருக்கிறது. கொரோனா விதிகளை பின்பற்றி வாக்களிக்க வந்த 5 மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். இரு மாதங்களாக 690 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் உ.பி (403 தொகுதிகள்), பஞ்சாப் (117), உத்தரகாண்ட் (70), மணிப்பூர் (60), கோவா (40) ஆகியவை ஆகும்.

    English summary
    BJP confident about 5 state assembly election at massive majority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X