25 கோடி ஏழைகளை.. எனது அரசு பணக்காரர்களாக மாற்றியுள்ளது.. லோக்சபாவில் பிரதமர் மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளில் பாஜக வறுமையை மீட்கக் கடுமையாக உழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் 25 கோடி ஏழை மக்கள் பணக்காரர்களாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். பிரதமர் மோடி தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

budget 2025 parliament narendra modi 2025

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார். 25 கோடி மக்களை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பிரதமர் மோடி பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி விலக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. இப்போது அதை ரூ.12 லட்சமாக உயர்த்தியுள்ளோம். இப்போது நாங்கள் மிடில் கிளாஸ் மக்களின் காயங்களைச் சரி செய்து, பேண்டேஜ் போட்டுள்ளோம்.

கடந்த 50 ஆண்டுகளாக ஏழ்மையை ஒழிப்போம் என்ற முழக்கங்களை மட்டுமே கேட்டு வந்தோம். ஆனால், இப்போது கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம். நாங்கள் பிரதமர் மோடிக்குப் பொய்யான நம்பிக்கையைத் தரவில்லை.. உண்மையான வளர்ச்சியைத் தந்துள்ளோம். ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் வறுமை மறைந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாற்றியுள்ளனர்.

எங்கள் அரசு 12 கோடி வீடுகளுக்குக் குழாய் நீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. ஏழைகளின் நலனுக்காக நாங்கள் மிகவும் உழைத்துள்ளோம், அதனால்தான் குடியரசுத் தலைவர் தனது உரையிலும் அதைக் குறிப்பிட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+