"விரைவில் பொது சிவில் சட்டம்.." நாடு முழுவதும் நிச்சயம் அமல்படுத்தப்படும்! பாஜக வாக்குறுதி
டெல்லி: விரைவில் லோக்சபா தேர்தல் தொடங்க உள்ள நிலையில், பாஜக தற்போது தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்திருக்கிறது.
ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

'மோடியின் கேரண்டி' என்கிற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக பாஜகவினர் கூறியுள்ளனர். இதில்,
முத்ரா திட்டத்தின் கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்
இந்தியாவை 3 வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவோம்
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும்
3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்படும்; 5 ஆண்டுகளுக்கு இலவச தானியம்
புதிய விமான நிலையங்கள், புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும்
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்
உள்ளிட்டவை அறிவிப்புகள் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக பொது சிவில் சட்டம் குறித்த அறிவிப்பு விவாதங்களை கிளப்பியுள்ளது. நாட்டில் முதன் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பியது. இப்படி இருக்கையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்கிற பாஜகவின் அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடையே விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
அதாவது, இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும். முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன. இந்து மதத்திலும் இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு.
பொது சிவில் சட்டம், தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.
பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மத விஷயங்களில் அரசின் முரண்பாடாக கருதப்படலாம், மேலும் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும். அரசியலமைப்புச் சீர்குலைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications