ஷாருக்கான் ஒரு துரோகி.. பாஜக தலைவர் பகீர் குற்றச்சாட்டு! சர்ச்சையில் KKR
டெல்லி: ஐபிஎல் 2026க்கு அனைத்து டீம்களும் முழு வேகத்தில் தயாராகி வருகின்றன. இப்படி இருக்கையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்திருந்தது. இதற்காக பாஜக தலைவர்கள் ஷாருக்கானை துரோகி என விமர்சித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் தற்போது நிலைமை சரியில்லை. ஏற்கெனவே இருந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும் நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் ஆட்சியும் ஆட்டம் கண்டு வருகிறது. குறிப்பாக அந்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் இந்தியா எதிர்ப்பு கருத்தில் உறுதியாக இருக்கின்றனர். எனவே அங்குள்ள இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

நிலைமை இருப்படி இருக்கும்போது, அந்நாட்டின் கிரிக்கெட் வீரரை ஏன் ஏலத்தில் எடுக்க வேண்டும்? இந்துக்களை தாக்கும் நாட்டை சேர்ந்தவர்களை ஏலத்தில் எடுத்ததன் மூலம் ஷாருக்கான் துரோகியாகியுள்ளார் என்று உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் சங்கீத் சோம் கடுமையாக சாடியுள்ளார்.
மீரட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒருபுறம் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்; மறுபுறம் ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கப்படுகிறார்கள். தேசத்துரோகி திரைப்பட நடிகர் ஷாருக் கான், வங்கதேச கிரிக்கெட் வீரரான ரஹ்மானை ₹9 கோடிக்கு வாங்கியுள்ளார். இத்தகைய துரோகிகளுக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. இந்த நாட்டின் மக்கள்தான் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள். பணம் இந்த நாட்டிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டீர்கள்" என கொந்தளித்துள்ளார்.
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்ட ரஹ்மான் போன்ற வீரர்கள் இந்தியா வந்தால், விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாது என்றும் சோம் சூடாக எச்சரித்துள்ளார்.
ஆன்மீக குரு தேவகினந்தன் தாக்கூரும், ஷாருக்கானை விமர்சித்துள்ளார். "வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு, உயிரோடு எரிக்கப்படுவதையும், பெண்கள் தாக்கப்பட்டதையும் அவர் பொருட்படுத்தாமல், தனது அணியில் வங்கதேச வீரர்களைச் சேர்த்திருப்பதை, KKR உரிமையாளரை பிரபலமாக்கிய சனாதன பக்தர்கள் மற்றும் இந்துக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
கடந்த மாதம் வங்கதேசத்தின் மைமென்சிங்கில், தீபு சந்திர தாஸ் என்ற இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம், இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில்தான் பாஜக தலைவர்கள் ஷாருக்கானை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
மறுபுறம், உத்தரப் பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாதா பிரசாத் பாண்டே, பாஜக தலைவர் சங்கீத் சோமின் கருத்துக்களைக் கண்டித்துள்ளார். "ஷாருக்கான் ஒரு இஸ்லாமியர் என்பதால்தான் அவரை பாஜக குறிவைக்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.
சங்கீத் சோமின் கருத்துக்களை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜகவின் கூட்டணிக் கட்சியும், உத்தரப் பிரதேச அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications