டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''அவை மரபுகளை மீறி விட்டார்''... மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் நோட்டடீஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாய போராட்டங்களில் இறந்தவர்களுக்காக மக்களவையில் ராகுல் காந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதன் மூலம் ராகுல் காந்தி சபை மரபை மீறி விட்டார் என்று தற்போது புகார் கூறப்பட்டுள்ளது.

பாஜக எம்.பி.க்கள் சஞ்சய் ஜெய்ஸ்வால், நிஷிகாந்த் துபே, பிபி சவுத்ரி மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் சபாநாயகரிடம் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்தனர்.

BJP MPs Move Breach of Privilege Motion Notice Against Rahul Gandhi in LS

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று மக்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் , 'வேளாண் சட்டங்களால் எந்த நிலையிலும் விவசாயிகளுக்கு ஆபத்துதான் உள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒரு நான்கு பேர் ஆதாயம் பெறத்தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த 4 பேர்தான் இந்தியாவை வழிநடத்துகின்றனர். அவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும். இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகள் பலரை அரசு பலி கொடுத்து விட்டது' என்று பேசினார்.

மேலும் விவசாய போராட்டங்களில் இதுவரை 200 பேர் இறந்து விட்டதாக கூறிய ராகுல் காந்தி, அவர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவதாக கூறினார். அவருடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதன் மூலம் ராகுல் காந்தி சபை மரபை மீறி விட்டார் என்று தற்போது புகார் கூறப்பட்டுள்ளது.

இந்திய நிலத்தை சீனாவுக்கு விட்டு கொடுத்து விட்டார் பிரதமர்... ராகுல் காந்தி கடும் தாக்கு!இந்திய நிலத்தை சீனாவுக்கு விட்டு கொடுத்து விட்டார் பிரதமர்... ராகுல் காந்தி கடும் தாக்கு!

பாஜக எம்.பி.க்கள் சஞ்சய் ஜெய்ஸ்வால், நிஷிகாந்த் துபே, பிபி சவுத்ரி மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் சபாநாயகரிடம் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்தனர். இது தொடர்பாக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், மக்களவையில் முதன் முறையாக, ஒரு எம்.பி. அனைவருக்கும் எழுந்து மவுன அஞ்சலி செலுத்த உத்தரவு பிறப்பிப்பதைக் கண்டோம். சில எம்.பி.க்கள் அதைச் செய்தார்கள். என்வே உத்தரவு பிறப்பித்த ராகுல் காந்தி மற்றும் எழுந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் எதிராக மக்களவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பாஜக தலைமை கொறடா ராகேஷ் சிங் கூறுகையில், ராகுல் காந்தியின் செயல் அதிர்ச்சியூட்டுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. இது அவை என்னும் கோவிலை களங்கப்படுத்தும் செயல். மவுன அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ராகுல் காந்தி முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாக அவர் ஒரு கோரிக்கையை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

English summary
Rahul Gandhi observed a 2-minute silent tribute in the Lok Sabha for those who died in the agrarian struggles. Trinamool Congress and DMK members also paid silent tributes. It is now being complained that Rahul Gandhi has violated the tradition of the House by doing so
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X