மேரா பரிவார்... பாஜபா பரிவார்... கொடியேற்றிய அமித் ஷா... வாக்காளர்களை கவர அதிரடி திட்டம்
டெல்லி:லோக்சபா தேர்தலை முன் வைத்து, 5 கோடி ஆதரவாளர்கள் வீடுகளில் பாரதீய ஜனதா கொடியை ஏற்றி வைக்கும் பிரமாண்ட திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் எப்படியாவது வென்று அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என்று பாஜக பகீர பிரயத்தனம் செய்து வருகிறது. அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

அதில் ஒரு முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் 5 கோடி பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றி வைக்கும் மேரா பரிவார், பாஜபா பரிவார் என்ற பிரமாண்ட திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முன்னோட்டமாகவும், தொடக்கமாகவும் கட்சியின் தலைவர் அமித் ஷா, குஜராத்தில் உள்ள தனது வீட்டில் பாஜக கொடியை ஏற்றி வைத்து இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.அப்போது அவர் கூறுகையில், பாஜகவின் கொடி, வளர்ச்சி, நம்பிக்கை, தேசியவாதத்தின் அடையாளம் ஆகும்.
அத்துடன் மோடி காலத் தில் அது தாஜா செய்தல், சாதியம், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியதையும் காட்டுகிறது என்று பேசினார். நிகழ்ச்சியில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.கொடியேற்றும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் 2ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
அமித் ஷாவை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றி, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications