ஆஹா.. "மிஷன் சவுத்.." மெகா பிளானை இறக்கும் மோடி.. இன்றே வெளியாகும் பாஜகவின் பரபர லிஸ்ட்?
டெல்லி: லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் வரிசையாகத் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகிறது.
தேர்தல் குழு கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள பாஜக, தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்கான நடவடிக்கையை பாஜகவும் ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: இதில் மொத்தமுள்ள லோக்சபா இடங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் பல தொகுதிகளில் பாஜக வென்றதே இல்லையாம். அந்த தொகுதிகளான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து இன்று வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் சுமார் 130 இடங்களுக்கான வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறும். இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பாஜக பிளான்: இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தென் இந்தியாவில் இருந்து பல இடங்களுக்கான வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்தால், பிரச்சாரம் செய்ய அதிக நாட்கள் கிடைக்கும் என்பதே அவர்கள் திட்டம். தென் இந்தியா மட்டுமின்றி மத்தியப் பிரதேசத்திலும் பாஜக இதே திட்டத்தைக் கையில் எடுக்க உள்ளது.
மேலும், ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள சில மத்திய அமைச்சர்களும் இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார்களா என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இவை உறுதியான தகவல் இல்லை. தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.. இருப்பினும், அதற்கான இறுதி முடிவைக் கட்சித் தலைமையே எடுக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 150 பேர்: லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் வராத நிலையில், அதற்கு முன்னதாகவே 150 பேரைக் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அதிர்த்துத் தர பாஜக திட்டமிட்டுள்ளது. எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ளதோ.. எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் கூட்டணி இறுதியாகி உள்ளதோ அங்கெல்லாம் முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்குப் பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. இந்த முதல் லிஸ்டிலேயே சில மத்திய அமைச்சர்களின் பெயர்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications