ஏர் இந்தியாவை விற்றுவிட்டோம், அடுத்து எல்ஐசி பங்குகள் விற்பனை தொடங்குறோம் -பட்ஜெட்டில் நிர்மலா உரை
ஏர்-இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு கடந்தாண்டு விற்பனை செய்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையை தொடங்க இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2022- 2023 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காகிதமில்லா பட்ஜெட்டாக இரண்டாவது முறை தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளைப் போலவே அதிக எதிர்ப்பார்ப்புடன் நோக்கப்பட்ட பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருந்தது. அதே நேரத்தில் செலவீனங்களுக்காக சொத்து விற்பனை மற்றும் கடனை அரசு நம்பியிருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட் 2022
ரயில்வே , போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவ கட்டமைப்புகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் செய்யப்பட்ட நிலையில், அரசுத்துறையின் மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனையை தொடங்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா விற்பனை
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை, அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக பல முயற்சிகளை எடுத்து வந்தது. ஏர் இந்தியா விற்பனை அக்டோபர் 8ஆம் தேதி உறுதியான நிலையில், இந்த விற்பனை மூலம் மத்திய அரசு சுமார் 18000 கோடி ரூபாய் பெற உள்ளது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாகவும், மீதமுள்ள தொகை ஏர் இந்தியா தனது கடனை தீர்க்க பயன்படுத்த உள்ளது.

எல்ஐசி பங்குகள் விற்பனை
ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், அரசு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது பட்ஜெட் உரையில், பங்குச்சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம் எல்ஐசியின் பங்குகளை விற்க முடிவு செய்து இருப்பதாகவும், இதேபோல பல்வேறு அரசுத் துறைகளின் பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 1.75 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பாரத் பெட்ரோலியம் எல்ஐசி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Recommended Video

எல்ஐசி நிறுவனம்
இந்திய அரசால் சுமார் 5 கோடி ரூபாயில் துவக்கப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு முப்பத்தி எட்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில் நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பு வசதி உட்பட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு எனத் தனது நீதியை இதுவரை வழங்கி வந்துள்ளது இந்த பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் சமூக மேம்பாட்டு பணிகளுக்கு நிதி பெற முடியாத நிலை உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை கண்டித்து பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு நிலையில் தற்போது எதிர்ப்புகளை மீறி பட்ஜெட்டில் எல்ஐசி நிறுவன பங்குகள் விற்பனை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications