டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு

80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: 80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் பேராக அதிகரித்தள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன், வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Cabinet approves free food grain to beneficiaries for 2 more months

மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கைஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மோடி.

Cabinet approves free food grain to beneficiaries for 2 more months

இந்த நிலையில் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது கொரோனா பரவல் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The government approved the allocation of additional food grain to National Food Security Act beneficiaries under Pradhan Mantri Garib Kalyan Anna Yojana for a period of two months - May and June 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X