“மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்
டெல்லி: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஏற்படுகிறது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவ.23ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், நவ.21ம் தேதி அவரது கடைசி பணி நாளாகும். இப்படி இருக்கையில், ஓய்வு பெறுவதற்கு ஓரு நாள் முன்னர் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.
தீர்ப்பில், "மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது. பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில், மசோதாவை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும். ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம் என்பது, மசோதாவை ஆய்வு செய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவதுதான். ஆளுநர் காரணம் ஏதும் கூறாமல் நீண்ட காலமாக மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
மசோதா ஆளுநருக்கு அனுப்பப்படும்பட்சத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம். அல்லது திருப்பி அனுப்பலாம். இந்த மூன்று வாய்ப்புகள்தான் ஆளுநருக்கு இருக்கிறது. இந்த 3ல் ஒன்றை தேர்ந்தெடுப்பதுதான் ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரம். மத்திய அரசு கூறுவதை போல, மசோதாக்களை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு கிடையாது. ஒரு மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகார மையம் இருக்க கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது. ஆளுநர் செயல்படாமல் இருந்தால், அரசியலமைப்பும், நீதிமன்றங்களும் அதை ஆய்வு செய்யும்" என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications