டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமமுகவிற்கு குக்கரை ஒதுக்க முடியாது.. 300 பக்கத்திற்கு பிரமாண பத்திரம்.. தேர்தல் ஆணையம் அதிரடி

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்து இருந்தது. இது டிடிவி தினகரனுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் டிடிவி தினகரன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட இருக்கிறது. நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும்.

சினிமா பாணி பேச்சு.. சோஷியல் மீடியா அறிவு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!சினிமா பாணி பேச்சு.. சோஷியல் மீடியா அறிவு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!

 நாளை வேட்புமனு

நாளை வேட்புமனு

அதே சமயம் நாளைத்தான் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குக்கர் சின்னம் கிடைக்காததால் இதுவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டு இருந்தது.

 பதில்

பதில்

இதையடுத்து காலையில் எழுத்து பூர்வமாக கருத்தும் எதுவும் தெரிவிக்காத தேர்தல் ஆணையம் தற்போது இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

 என்ன பிரமாண பத்திரம்

என்ன பிரமாண பத்திரம்

மொத்தம் அந்த பிரமாண பத்திரத்தில் 300 பக்கங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த 300 பக்கங்கள் முழுக்க அமமுகவிற்கு ஏன் சின்னம் கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது. அதில் குக்கர் சின்னம் என்பது பொதுவானது, அதை டிடிவி தினகரனுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது. அமமுக பதிவு செய்யப்பட கட்சி கிடையாது. அதனால் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 சின்னம் என்ன

சின்னம் என்ன

மேலும் அமமுகவிற்கு வேறு சின்னம் வேண்டுமானால் ஒதுக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனால் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதிய சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இருந்த போதிலும் இந்த வழக்கில் நாளை நடக்கும் விசாரணையில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

English summary
Can't give Cooker for AMMK: ECI files an 300 pages affidavit in Supreme court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X