Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் முக்கிய மூவ்.. மத்திய அமைச்சரை திடீரென இன்று சந்தித்த துரை முருகன்! ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி விஷயத்தில் தமிழ்நாடு, கர்நாடகா இடையே பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். ஏற்கனவே கடந்த 5ம் தேதி இருவரும் சந்தித்து பேசிய நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் அதுபற்றி விபரம் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும்.

Cauvery Row: Durai Murugan met Union Water Resources Minister Gajendra Singh Shekhawat today in Delhi

ஆனால் பல நேரங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் கர்நாடகா, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவது இல்லை. மேலும் தண்ணீர் திறக்காமல் இருப்பதற்கான காரணமாக தங்களுக்கே நீர் இல்லை என்ற காரணத்தை கூறி கர்நாடகா அரசு கூறும்.

இதனால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் பாதிக்கப்படும். மேலும் மேட்டூர் அணைக்கும் நீர் கிடைக்காத சூழல் உள்ளது. இதற்கிடையே தான் காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டவும் கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இருமாநில தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் தான் டெல்லியில் இன்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த வேளையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்காமல் உள்ளது. இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை முருகன் கோரிக்கை வைத்தார்.

கர்நாடகா அரசு காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் 3ம் தேதி நிலவரப்படி 12.213 டிஎம்சி நீர் வந்திருக்க வேண்டும். ஆனால் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது. மேலும் 9.220 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இந்த தண்ணீரை திறந்து விட கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கான நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை முறையாக பின்பற்ற கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

அதோடு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த 5ம் தேதி ஏற்கனவே கஜேந்திர சிங் ஷெகாவத்தை, துரை முருகன் சந்தித்து இந்த கோரிக்கை வைத்து இருந்தார். இதையடுத்து அடுத்த 15 நாளில் மீண்டும் துரை முருகன் ஷெகாவத்தை சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+