குழந்தை திருமணங்களில் தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் டாப்.. மத்திய அரசு கூறிய ஷாக் தகவல்!
டெல்லி: குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரம் குஜராத், தமிழ்நாடு உட்பட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதாகவும் மத்திய அரசு கூறியிருக்கிறது.
இந்தியாவில் திருமண வயது என்பது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி தண்டனைக்கு ஆளாவார்கள். ஆனால் இன்னமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த குழந்தை திருமணம் அரங்கேறி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக தெரிய வந்ததையடுத்து கடந்த ஆண்டு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா இதற்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து காவல்துறை இதுதொடர்பான வழக்குகளை தூசி தட்டியது. இப்படியாக மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டியது. 2,441 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை மாநில அரசுகள் கறாராக அமல்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் வெளி வந்துள்ளன. அதாவது, மத்திய பாஜக அரசு எந்த குஜராத் மாடலை நாடு முழுவதும் பெருமையாக பேசியதோ, அந்த மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக இதே மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அதேபோல சமூக நீதியின் மாநிலமாக முன்னிறுத்தப்படும் தமிழ்நாட்டிலும் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதிகள், "குழந்தை திருமணங்களை தடுக்க எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது வழக்கமாக செய்வதுதான். ஆனால், குழந்தைகள் திருமணத்த தடுக்க இது சமூக அடிமட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறினார். இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சார்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, "விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன" என்று கூறினார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், விழிப்புணர்வு திட்டங்கள் அடிப்படியில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர். மேலும், குழந்தை திருமணங்களின் தன்மை மற்றும் அளவு குறித்து பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 இன் விதிகளை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு வகுத்துள்ள கொள்கை என்ன? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications