பெயர் மாறும் 100 நாள் வேலை திட்டம்! காந்தி பெயர் நீக்கம்! நிதியை 90% லிருந்து.. 60% ஆக குறைகிறது!
டெல்லி: கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தை கொண்டுவர மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தின் பெயரை, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மட்டுமல்லாது மத்திய அரசு நிதியை 90%லிருந்து 60%ஆக குறைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இந்த அம்சங்களை அடங்கிய புதிய மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த மசோதா, வேலை நாட்களின் எண்ணிக்கையை 100-ல் இருந்து 125 ஆக உயர்த்துகிறது. ஆனால், இது மாநிலங்களுக்கு நிதிச்சுமையை அதிகரித்து, தற்போதைய சட்டத்தின் தேவை அடிப்படையிலான கட்டமைப்பை முற்றிலும் கலைக்கிறது. "VB-G-Ram-G" என்பது இதன் சுருக்கமான பெயராக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செலவு பகிர்வு அதிகரிப்பு
இப்புதிய சட்டத்தின் நோக்கம், 'வளர்ச்சியடைந்த பராதம் @2047' என்கிற தேசிய தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை உருவாக்குவதே என்று மத்திய அரசு கூறியுள்ளது. பழைய சட்டத்தில், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மத்திய அரசே வழங்கி வந்தது. உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கான மூலப்பொருள் செலவுகளை மட்டும் மாநிலங்கள் பகிரிந்துகொண்டன. ஆனால், இந்த முறை செலவுகள் 60-40 என பிரிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய சட்டத்தில் செலவுகளை ஏற்பத்தில் சில மாநிலங்களுக்கு விதிவிலக்கு உள்ளது. அதாவாது வடகிழக்கு, இமயமலையில் உள்ள மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கான செலவுகளை பழையபடி மத்திய அரசே ஏற்கும்.
அதிக அதிகாரம்
மேலும், இத்திட்டம் எங்கு, எப்படி செயல்படுத்தப்படும் என்பதில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை மசோதா வழங்குகிறது. பழைய திட்டத்தில் தேவை அதிகமாக இருக்கிறது எனில், அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் புதிய சட்டத்தில் அப்படியெல்லாம் ஒதுக்கப்படாது. நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசின் கை ஓங்கியிருக்கும். இந்த மசோதாவின் விதி எண் 5(1), மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரத்தை வழங்குகிறது. அதாவது, ஒரு மாநிலத்தில் எந்த பகுதிகளை கிராமப்புற பகுதிகள் என்பதை அறிவித்து, அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தலாமா? என்பதை மத்திய அரசே முடிவு செய்யும்.
100 நாள் வேலை vs விவசாய கூலி
அதேபோல பருவகாலங்களில், அதாவது விவசாய வேலை அதிகமாக இருக்கும் நாட்களில் ஊரக வேலையை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்ககிறது.
100 நாள் வேலையை காரணம் காட்டி, விவசாய வேலைக்கு ஆட்கள் வருவது கிடையாது என்று நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்லும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உண்மையில், 100 வேலையில் ஊதியம் அதிகம் என்பதால்தான் சாதாரண விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் இருந்தது. எனவே நில உடைமையாளர்கள் நியாமான அளவுக்கு ஊதியத்தை வழங்கினார்கள்.
குறையும் கூலி
ஆனால், புதிய சட்டத்தின் மூலம், வேளாண் தொழில்கள் உச்சத்தில் இருக்கும் காலத்தில் 100 நாள் வேலைகளை நிறுத்தினால், மீண்டும் விவசாய கூலிகளாக செல்லும் மக்களுக்கு குறைந்த கூலியே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நில உடமையாளர்கள் கொடுப்பதுதான் கூலி, அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்கிற நிலை உருவாகும்.
யதார்த்தத்தில் சாத்தியமாகுமா?
அதேபோல புதிய சட்டத்தில், 100 நாட்கள் பணி நடக்கும் இடத்தை ஜிபிஎஸ்-ல் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், வருகை பதிவை மொபைல் செயலியில் அப்டேட் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் சாத்தியமாகுமா? தொழில்நுட்ப வசதிகள் இல்லாத கிராமங்களில் இது எப்படி பின்பற்றப்படும் என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.
மத்திய அரசின் வாதம்
அதேபோல கிராமப்புற இந்தியா பொருளாதார ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் மிகவும் முன்னேறிவிட்டதால், 2005 இல் உருவாக்கப்பட்ட பழைய சட்டம் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த சட்டத்தை விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள் இந்த மாற்றத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications