டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதை நினைச்சு மட்டுமே கவலையாக இருக்கு.. திகார் ஜெயிலுக்கு போகும் போது ப சிதம்பரம் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி: சிபிஐ நீதிமன்ற உத்தரவால் 14 நாள்கள் திகார் சிறை வாசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ப சிதம்பரம், சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே தான் கவலைப்படுவதாக தெரிவித்தார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 21ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 15 நாள்காக சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    Chidambaram says i am only worried about the economy

    அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ப சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என சிபிஐ தரப்பு குற்றம்சாட்டி காவல் நீட்டிப்பை நீட்டித்துக் கொண்டே இருந்தது.

    இந்நிலையில் 15 நாள்கள் காவலுக்கு பின்னர் இன்று ப சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப சிதம்பரம் தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஒபி ஷைனி, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவரை டெல்லி திகார் சிறைக்கு போலீசார் அழைத்து செல்ல இருந்தனர். அப்போது ப சிதம்பரம் தான் ஜெயிலுக்கு போவதை பற்றி கவலைப்படவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டும் தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 5 சதவீதம் என்று கையை காட்டியவர், உங்களுக்கு தெரியுமா 5 சதவீதத்தை.. பொருளாதாரம் 5 சதவீதம் சரிந்துவிட்டதை அப்படி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரம் பாஜக ஆட்சியில் சரிந்துவிட்டதாக குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரான ப சிதம்பரம் அடிக்கடி பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "I am only worried about the economy," Chidambaram said after a Delhi court ordered 14-day judicial custody
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X