கவனமாக இருங்கள்.. பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்!
நாடு முழுக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் நாடு முழுக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் இந்தியா முழுக்க பெரிய அளவில் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுக்க மாணவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பல மாநிலங்களில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சட்டத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே என்று பெரு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

என்ன கடிதம்
இந்த போராட்டத்தை கவனித்து வரும் உள்துறை அமைச்சகம் தற்போது மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை அமைச்சகம் தனது கடிதத்தில் சட்டம் ஒழுங்கை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள்.வன்முறையால் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க கவனமாகசெயல்படுங்கள். பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதுமான படைகள்
போதுமான படைகளை பயன்படுத்தி வன்முறையை கட்டுப்படுத்துங்கள். பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும். அமைதியான முறையில் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்ட வேண்டும்.

வதந்தி கூடாது
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் சிலர் அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். பொய்யான வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு முக்கியம்
மக்களின் பாதுகாப்பு முக்கியம். அதற்கான சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். கூடுதல் படைகள் பாதுகாப்பு வேண்டும் மாநிலங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்கலாம்.மத்திய அரசு உதவுவதற்கு படைகளை தயார் நிலையில் வைத்து இருக்கிறது, என்று உள்துறை அமைச்சகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications