டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்?

Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச சட்ட மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய தலைம நீதிபதி ரஞ்சன் கோகாய் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் கூறிய பாலியல் குற்றசாட்டின் மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

CJI may attend Law conference in Russia

வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ் என்பவர் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றம் சுமத்தினால் தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டதற்கான ஆதாரங்களை சீலிடப்பட கவரில் நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் இருந்ததால் ஆலோசிக்க சிபிஐ இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி உத்தரவிடப்பட்டு இருந்தது.

உலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்: 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைதுஉலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்: 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைது

இந்த நிலையில் சர்வதேச சட்ட மாநாடு அடுத்த மாதம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கடந்த 2017 ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பின்னர் இப்போது நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு மே மாதம் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ரஞ்சன் கோகாய் கலந்து கொள்ளும் பட்சத்தில் இந்திய தலைமை நீதிபதி ஒருவர் ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச சட்ட மாநாட்டில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாக இருக்கும்.

முன்னதாக ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றசாட்டு உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. அதோடு இந்த குற்றசாட்டின் உண்மைத் தன்மை கண்டறிய வில்லை என்றால் நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடும் என்றனர். மட்டுமல்லாது இந்த குற்றசாட்டு உண்மையில்லை என்று தெரிய வந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்தனர்.

English summary
Sources say that CJI Ranjan Gogoi may attend Law conference in Russia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X