ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பே.. 'கன்பார்ம் டிக்கெட்'.. எதிர்பார்த்த மிகப்பெரிய குட்நியூஸ்
டெல்லி: ரயில்களில் பயணிக்க 60 நாள் முன்பே முன்பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனாலும் வெயிட்டிங் லிஸ்ட் தான் வருகிறது. ரயிலில் டிக்கெட் கிடைத்ததா அல்லது இல்லையா என்பதை அறிய ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு தான் இறுதிப்பட்டியல் கிடைக்கும். அதன்பிறகு தான் பயணத்தை திட்டமிடமுடியும் என்கிற நிலை இருந்து வந்தது. இந்நிலையில் ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறது.
நாட்டில் அதிகப்படியான மக்களால் விரும்பப்படும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருக்கிறது தொலைதூரம் செல்ல விரும்புவோருக்கு ரயில் தான் முதல் விருப்பமாக உள்ளது. ஆனால் போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால். ரயில்களில் டிக்கெட் அவ்வளவு எளிதாக கிடைப்பது இல்லை.. எனினும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள், முன்பதிவு செய்து ஏசி மற்றும் படுக்கை வசதி பெட்டிகளில் பயணிக்கிறார்கள். அதேபோல் முன்பதிவு செய்யாமல், அன்ரிசர்வ்டு பெட்டிகளிலும் பல லட்சம் பேர் தினமும் பயணித்து வருகின்றனர். டிக்கெட் கிடைக்காத காரணத்தால் தான் பலரும் அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணிக்கிறார்கள்.

ஸ்லீப்பர் கோச்
ரயில்களில் ஸ்லீப்பர் கோச்சில் கட்டணம் என்பது மிக குறைவு ஆகும். அதுதான் பலரும் ரயிலில் பயணிக்க விரும்ப முக்கிய காரணம் ஆகும். அடுத்ததாக வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அதிக சவுகரியம் இருக்கும். உடல்களில் அலுப்பே தெரியாது. நான்கு நாட்கள் பயணித்தாலும் வீட்டில் இருப்பது போல் தான் இருக்கும். ஆனால் பேருந்தில் 12 மணி நேரம் பயணித்தாலே ஒரு நாள் முழுக்க அலுப்பு இருக்கும். அடிக்கடி நடந்து செல்ல முடியும், கழிவறை உள்பட பல்வேறு வசதிகள் காரணமாக நாள்தோறும் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
24 மணி நேரம் முன்பு கன்பார்ம் டிக்கெட்
வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்கள் வருவதற்கும், தென் மாநிலங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லவும் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஆனால் டிக்கெட் கிடைப்பது உறுதி செய்ய போராட வேண்டிய நிலை இருக்கிறது. கடைசி 4 மணி நேரத்தில் தான் டிக்கெட் கிடைக்குமா இல்லையா என்பதை அறியும் வகையில் ரயில் பயணிகள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால் பயண திட்டத்தில் பலருக்கும் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் விதமாக திட்டத்தை ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை அவர்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டத்தினை ரயில்வே எடுத்துள்ளது
சோதனை அடிப்படையில் தொடக்கம்
முதல்கட்டமாக ஜூன் 6ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. மேற்கு ரயில்வே மண்டலத்தில் பிகானோர் பகுதியில் இந்த திட்டம் ஆரம்ப கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.அதன்படி ரயில் புறப்படும் 24 மணி நேரம் முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தில் ஏதேனும் மாற்றம், மீண்டும் பயண தேதியை திட்டமிட முடிகிறது.
விரைவில் நாடு முழுவதும் அமல்
பயணிகளின் ரயில் பயணத்தை எளிதாக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் குறிப்பிட்ட பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் ரயில்வே அதிகாரிகள், இந்த திட்டம் பற்றி பொதுமக்களின் கருத்துகள் முழுவதுமாக அறியப்பட்டு அது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் இது குறித்து உரிய நடைமுறைகள் எடுக்கப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாடு முழுவதும் வெளியாகலாம் என கூறினார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications