விஸ்வகுரு மோடி.. முதல்ல செய்வாரு.. அப்புறம் யோசிப்பாரு.. 2000 நோட்டு வாபஸ் குறித்து காங். ஆவேசம்
டெல்லி: 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் , நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்த செய்திக் கட்டுரையை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஜெய்ராம் ரமேஷ், 'எங்கள் செல்ப் ஸ்டைல் விஸ்வகுருவின் (பிரதமர் நரேந்திர மோடி), எப்படீன்னா முதல்ல எதையும் யோசிக்காம செஞ்சுடுவாரு.. அதுக்கு அப்புறம் தான் அதை பற்றி யோசிப்பாரு" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவும் மத்திய அரசை கடுமையாக சாடியதோடு, "நவம்பர் 8 ஆம் தேதி 2016 இல் வந்த பேய் இப்போது மீண்டும் தேசத்தை வேட்டையாட வந்துள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது பிற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போதைய நிலையில் செல்லும் எனவே பயப்படத்தேவையில்லை. எனினும் வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து 500 ரூபாய் அல்லது வேறு நோட்டுக்களை வாங்கி கொள்ளலாம்
அதேநேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பது இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நடைமுறைக்கு வருகிறது. மேலும் தினசரி ரூ.20,000 வரை எந்த வங்கியிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30ம் தேதி வரை இப்படி மாற்றிக்கொள்ள முடியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications