லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்.. காரணம் என்ன?
டெல்லி: லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லோக்சபாவில் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் இரு வாரங்களாக அவை அமளியால் முடங்கியது. இதைத்தொடர்ந்து, 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது.

இன்று லோக்சபாவில் காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்றே கூறினோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை திருதிராஷ்டிரனுடன் ஒப்பிட்டுப் பேசினார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், லோக்சபாவில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பதிலுரை ஆற்றினார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பதில் அளித்துப் பேசிய பிரதமர் மோடி, ஒன்றரை மணி நேரமாக மணிப்பூர் விவகாரம் பற்றி பேச்சே எடுக்காத நிலையில், மணிப்பூர் விவகாரம் பற்றி பேசுங்கள் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பினர்.
மணிப்பூர் பற்றி பேசாத பிரதமர் மோடியை கண்டித்து வெளிநடப்பு செய்த நிலையில், தனது பேச்சு தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையில் இல்லை. இதைத்தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால் தீர்மானத்திற்கு எதிராக குரல் எழவில்லை. இதையடுத்து, மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு தொடர்ந்து இடையூறு செய்ததாகவும் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது குற்றம்சாட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' சிறப்புரிமைக் குழு விசாரிக்கும் வரை அவரை இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முன்னதாக, இன்று பிரதமர் மோடி பேசும்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறித்துப் பேசினார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உள்ள சில விஷயங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, கற்பனையில் கூட நினைக்காத அளவுக்கு விசித்திரமானவை. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி என்ன ஆனார்? அவரது கட்சி அவருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. ஏன் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது? ஆனால் அமித் ஷா மற்றும் லோக்சபா சபாநாயகரின் பெருந்தன்மையால் தான் நேரம் முடிந்த பிறகும் அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது என பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications