இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா.. 306,465 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு கோடியே 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 145,513 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 306,465 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகில் கொரோனா தொற்றால் 7 கோடியே 65 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 16 லட்சத்து 91 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 37லட்சத்து 18 ஆயிரம் பேர் மீண்டனர். தற்போது கொரோனா பாதிப்புடன் தற்போது 21,179,536 சிகிச்சை பெற்று வருகிறார்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 18,061,780 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு கோடியே 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 72லட்சம் பேரும், ரஷ்யாவில் 28 லட்சம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவால் 173,427 பேர் பாதிக்கப்பட்டனர். பிரேசிலில் 49,243 பேரும், ரஷ்யாவில் 28,209 பேரும், இங்கிலாந்தில் 27,052 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 26,834 பாதிக்கப்பட்டனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெக்காவில் நேற்று ஒரே நாளில் 2,497 பேர் கொரோனாவால் பலியாகினர். அதற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் 762 பேரும், பிரேசிலில் 669 பேரும், ரஷ்யாவில் 585 பேரும் தொற்றால் பலியாகினர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று 342 பேர் பலியாகினர். உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications