இந்தியாவில் வெறும் 2 நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.. பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த இரு தினங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அதன் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,36,019 பேராகும். பலி எண்ணிக்கை 32,812 பேராகும். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,525 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி 12 லட்சமாக இருந்த கொரோனா தொற்று வெள்ளிக்கிழமை அன்று 13 லட்சமாக உயர்ந்தது. வெறும் இரு நாட்களில் 13 லட்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 14 லட்சத்தை தாண்டியது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 3.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,431 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. அது போல் 267 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 13,656 ஆக உயர்ந்துள்ளது.

சிறிதளவு சரிவு

சிறிதளவு சரிவு

ஞாயிற்றுக்கிழமை 6,044 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,13,238 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கம் போல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு சிறிதளவு சரிவை சந்தித்துள்ளது.

இரு கேஸ்கள்

இரு கேஸ்கள்

ஞாயிற்றுக்கிழமை அன்று கர்நாடகாவில் ஒரே நாளில் 5,199 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அது போல் தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சனிக்கிழமை நிலவரத்தை ஒப்பிடும் போது இரு கேஸ்கள் மட்டுமே குறைவாகும்.

தெலுங்கானாவில் பாதிப்பு

தெலுங்கானாவில் பாதிப்பு

கேரளாவில் நேற்று 927 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இதை சனிக்கிழமையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான். சனிக்கிழமை 1103 பேர் பாதிக்கப்பட்டனர். ஆந்திரத்திலும் சனிக்கிழமையை ஒப்பிடும் போது ஞாயிற்றுக்கிழமை அன்று குறைவான கொரோனா கேஸ்களே வந்தது. தெலுங்கானாவில் 1500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+