டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்த டாக்டரிடம் வைத்தியம் பார்த்த 900 பேர்... பெண்ணால் பரவியது!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள ஒரு மொஹல்லா (அரசு மருத்துவமனை) மருத்துவமனையில் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியாமல், 900 பேர் அவரிடம் மருத்துவ பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதை அடுத்து அந்த மருத்துவர் உள்பட 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    இந்த மருத்துவருக்கு எப்படி கொரோனா பரவியது என்று பார்த்தால், கடந்த மார்ச் 10 அன்று சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய கொரோனா வைரஸ் பாதித்த ஒரு பெண், அந்த மருத்துவமனையில் மார்ச் 12ல் சிகிச்சை பெற்று உள்ளார். இதன் மூலம் டாக்டருக்கு கொரோனா பரவிய நிலையில் சங்கிலி தொடர்போல் அவர் 900 பேருக்கு வைத்தியம் பார்த்ததால் அத்தனை பேரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    வடகிழக்கு டெல்லியில் உள்ள மஜ்பூரில் உள்ள ஒரு மொஹல்லா கிளினிக்கில் மருத்துவர் ஒருவர் பணிபுரிந்தார். இந்த மொஹல்லா கிளினிக்குகள் முக்கியமாக பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்காக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சமூக சுகாதார மையங்கள் ஆகும். இங்கு நாள்தோறும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மஜ்பூரில் கொரோனா

    மஜ்பூரில் கொரோனா

    டெல்லி வன்முறையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஜ்பூரும் ஒன்று. இங்கு இந்த ஊரில் மக்கள் அடர்த்தி மிக அதிகம் ஆகும். இங்கு ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் அது மிகப்பெரிய பேரழிவை தரக்கூடியது ஆகும் டெல்லியின் மஜ்பூரில் எந்தவொரு வைரஸும் பரவுவது பேரழிவு தரக்கூடியது.

    மருத்துவமனையில் சிகிச்சை

    மருத்துவமனையில் சிகிச்சை

    இந்நிலையில் கடந்த மார்ச் 10 அன்று சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய கொரோனா வைரஸ் பாதித்த பெண் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியாமலேயே அந்த மருத்துவமனைக்கு மார்ச் 12ம் தேதி வந்து டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற்று உள்ளார். அதன்பிறகு மார்ச் 12 முதல் 18 வரை மொஹல்லா கிளினிக்கில் இருந்த நோயாளிகளுக்கு கொரோனா பாதித்தது தெரியாமல் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.

     900 பேர் தனிமையில்

    900 பேர் தனிமையில்

    இந்நிலையில் அண்மையில் உடல் நிலை பாதித்த நிலையில் அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா இருப்பது சோதனைக்கு பின் கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் டாக்டரிடம் மார்ச் 12 முதல் 15 வரை சிகிச்சை பெற்றவர்கள் உள்பட 900பேர் 15 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் தங்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    பெண் யாருடன் தொடர்பு

    பெண் யாருடன் தொடர்பு

    டெல்லியில் கொரோனா வைரஸ் என்ற கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 36 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதனிடையே மார்ச் 12 ம் தேதி 38 வயதான பெண் , அந்த பெண்ணுடன் நேரடி தொடர்பு கொண்டதில் இருந்து மேலும் ஐந்து நபர்கள் - அவரது தாய், சகோதரர் மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் டெல்லி விமான நிலையத்திலிருந்து அவரை வரவேற்க வந்த உறவினர். அவரை சுற்றி இருந்த சுமார் 74 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    அனைவருக்கு சோதனை

    அனைவருக்கு சோதனை

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுபற்றி கூறுகையில், "இந்தசம்பவத்திற்காக மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படாது. ஏனென்றால் இவை இல்லையெனில் தொலைதூர மற்றும் விலையுயர்ந்த மருத்துவமனைகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் ஏழைகள் உள்ளனர். மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பார்கள். COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள தில்லி அரசாங்கத்தின் அனைத்து சுகாதார ஊழியர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிசோதிக்கப்படுவார்கள். சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் மாதிரிகளை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்களும் பரிசோதிக்கப்படுவார்கள்" என்றார்-

    மருத்துவர்கள் வார்னிங்

    மருத்துவர்கள் வார்னிங்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 660ஐ தாண்டி உள்ளது இதுவரை 10 பேர் இறந்துள்ளார்கள். நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. மக்கள் ஊரடங்கை மதித்து நடக்காவிட்டால் ஊரடங்கை விட மிகமோசமான விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

    English summary
    900 Quarantined After Delhi Doctor Tests COVID+. infection started Began With Woman who returned from Saudi Arabia on March 10
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X