டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் பலியானவர்களை விலங்குகளை போல நடத்துகிறீர்கள்.. டெல்லிக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் பலியானவர்களை விலங்குகளை போல நடத்துகிறீர்கள் என்று டெல்லி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவின் மோசமான 2nd Wave India-வை தாக்கும் - Japan Nomura ஆய்வு

    நாடு முழுக்க கொரோனா காரணமாக பலியான நபர்களின் உடல்களை முறையாக பாதுகாக்க வேண்டும், ஒழுங்காக அவர்கள் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பிரச்சனையை தற்போது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் , சஞ்சய் கிஷான் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்

    உள்ளே வராதீர்கள்.. 15 முறை சரமாரியாக சுட்ட நேபாள போலீஸ்.. இந்தியர் ஒருவர் பலி.. எல்லையில் பரபரப்பு! உள்ளே வராதீர்கள்.. 15 முறை சரமாரியாக சுட்ட நேபாள போலீஸ்.. இந்தியர் ஒருவர் பலி.. எல்லையில் பரபரப்பு!

    என்ன விமர்சனம்

    என்ன விமர்சனம்

    இந்த வழக்கின் விசாரணையில் டெல்லி அரசை உச்ச நீதிமன்றம் மிக கடுமையாக விமர்சனம் செய்தது. டெல்லியில் நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு பெரிய கவலை அளிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள். அதில், டெல்லியில் கொரோனா காரணமாக பலியானோரின் உடல்கள் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நிலைமை கொடுரமாக உள்ளது.

    மனித உடல்கள்

    மனித உடல்கள்

    விலங்குகளை விட மிக மோசமாக மனிதர்களின் உடல்களை அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியாக சிகிச்சனி அளிக்கப்படாவில்லை. நோயாளிகள் கண்ணீர் விடுகிறார்கள். மருத்துவமனையில் நிலைமை மோசமாக இருக்கிறது. அவர்களை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. கொரோனாவால் பலியான நபர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுவது இல்லை.

    குப்பை தொட்டி

    குப்பை தொட்டி

    கொரோனா காரணமாக பலியான நபர்களின் உடல்கள் குப்பை தொட்டியில் கூட கண்டு எடுக்கப்படுகிறது. இதெல்லாம் மிக மோசமான நிலை. டெல்லியில் தற்போதுகொரோனா சோதனைகளையும் குறைத்து விட்டார்கள். ஏன் டெல்லியில் சோதனைகளை குறைத்தனர் என்று அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். அதிக டெஸ்ட் தேவைப்படும் போது அதை ஏன் குறைத்து இருக்கிறார்கள்.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    மருத்துவமனையில் அனுமதி கிடைக்காமல் மக்கள் அங்கும் இங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இடம் இல்லை. எங்கும் போதிய பெட் இல்லாத கொடூரம் ஏற்பட்டு உள்ளது. இதில் உடனே டெல்லி அரசு பதில் அளிக்க வேண்டும். மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் இதில் பதில் அளிக்க வேண்டும். 17ம் தேதிக்குள் இதில் மத்திய மாநில அரசுகள் பதில் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    English summary
    Coronavirus: Human bodies treated like animals says SC on Delhi on its suo moto case on handling of COVID dead bodies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X