6 அடி சமூக இடைவெளியே போதாது.. சுவாச துளிகள் மூலம் 19 அடியைத்தாண்டி பரவும் கொரோனா.. ஆய்வில் பகீர்
டெல்லி: குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் டிசம்பர் மாதம் முதல் குளிர்காலம் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை நானோ லெட்டர்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்கள்.

நோய் கட்டுப்பாட்டு மையம்
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்துள்ள 6 அடி தனி மனித இடைவெளி என்ற தொலைவுக்கு அப்பாலும் சுவாச நீர்த்துளிகள் பயணிப்பதை நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம்.

சுவாச நீர்த்துளிகள்
குளிரான சூழல்களில் சுவாச நீர்த்துளிகள் தரையில் விழுவதற்கு முன் 6 மீட்டர் தாண்டி, அதாவது 19.7 அடி பயணிக்கின்றன. இறைச்சிகளை பதப்படுத்தும் ஆலைகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் என வந்த புகார்களுக்கு இது உரிய விளக்கமாக கருதப்படுகிறது.

கொரோனா அதிகம்
குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவலாம். அது போல் சூடான வறண்ட இடங்களில் சுவாச நீர்த்துளிகள் எளிதில் ஆவியாகி விடுகின்றன. இத்தகைய நிலைமைகளில் ஆவியாகும் நீர்த்துளிகள் பேசும்போதும், இருமும்போதும் தும்மும்போதும் சுவாசத்தின் ஒரு பகுதியாக தெளிக்கப்படும் தூசுகள் மூலம் இந்த வைரஸ் பரவும்.

குளிர்காலத்தில்
இவை 10 மைக்ரான்களை காட்டிலும் சிறியவை ஆகும். இவை காற்றில் பல மணி நேரம் இடைநிறுத்தப்படலாம். குளிர்காலத்தில் நீர்த்துளி அடுத்தவர் மீது தெறிப்பது மிகவும் ஆபத்தானது. எப்போதுமே அறை குளிர்ச்சியாகவும், ஈரப்பதமிக்கதாவும் இருந்தால், அதிக தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும். தற்போது பராமரிக்கும்படி கூறப்பட்ட 6 அடி தொலைவு போதாது என கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications