உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா.. இதுவரை 256,294,400 பேர் பாதிப்பு.. 5,146,053 பேர் பலி
உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
டெல்லி: நாளுக்கு நாள் மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,146,053 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 19,646,625 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

உலக பாதிப்பு
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,146,053 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 256,294,400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 231,501,722 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 19,646,625 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா
அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.

இந்தியா
அமெரிக்காவில் ஒரு நாளில் 88,628 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளன.. ஒரேநாளில் 1,018 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 38,318,483 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 48,387,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,485,517 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 7,000 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன... 464,715 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. இதுவரை மட்டும் 33,885,132 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

பிரேசில்
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 21,989,962பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 12,301பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 279 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.. பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 21,989,962 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 612,177 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 279 பேர் இறந்துள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் இதுவரை 9,219,912 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,374 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,251 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2.60 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றில் இருந்து 79 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

விழிப்புணர்வு
பல நாடுகள் 2 டோஸ்களையும் போட்டுவிட்டு, 3வது டோஸ்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், இந்தியாவிலும் 2வது டோஸ்களை செலுத்தும் பணி தீவிரமாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை செலுத்தி கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர்.. எனவே, அந்தந்த நாடுகள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டன.. மேலும், தடுப்புசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு பரிசுகளையும் சில நாடுகள் அறிவித்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications