24 மணி நேரத்தில் 10,000+ கேஸ்கள்.. 395 மரணங்கள்.. இந்தியாவில் தாண்டவம் ஆடும் கொரோனா.. அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343,026 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்ட நிலையில் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இனிமேல்தான் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் உச்சம் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

Coronavirus: Total cases in India reaches 343026 cases, More than 10,000 cases in single day

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,243 பேருக்கு இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 9,915 பேர் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் 395 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 180,320 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். மொத்தமாக இந்தியாவில் தற்போது 152,791 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் நபர்களில் 8,944 பேரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது.

நேற்று அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 178 பேர் கொரோனா காரணமாக பலியானார்கள். அதேபோல் 2786 பேர் பாதிக்கப்பட்டனர். அங்கு மொத்தமாக 110744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் 56049 பேர் அங்கு இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 4128 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

Recommended Video

    கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை- விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் 46504 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 479 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் 42,829 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1400 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 24,104 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1506 பேர் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+