மகாராஷ்டிராவில் மிக மோசமாகும் நிலை.. என்ன செய்கிறது மாநில அரசு? தமிழகத்தில் நிலை என்ன?
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மகாராஷ்டிரா அரசு மிக கடுமையாக திணறி வருகிறது.
டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மகாராஷ்டிரா அரசு மிக கடுமையாக திணறி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது மகாராஷ்டிராவில்தான் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 8 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மொத்தமாக 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்று புதிதாக இரண்டு பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க கொரோனா காரணமாக 54 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இரண்டு மாநிலம்
அதன்படி கேரளா அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகிறது. இதற்காக மொத்த மாநில அரசும் சேர்ந்து ஒன்றாக உழைத்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மேற்பார்வையில் இந்த பணிகள் நடந்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா அந்த அளவுக்கு இந்த வைரசுக்கு எதிராக செயல்படவில்லை.

இப்போதும் இருக்கிறது
இப்போதும் மும்பையிலும், புனேவிலும் மக்கள் வெளியே நடமாடி வருகிறார்கள். அங்கு இப்போதும் மெட்ரோ மற்றும் மின்சார ரயிலில் கடுமையான கூட்டம் நிலவி வருகிறது. மக்கள் பெரிய அளவில் இந்த வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுடன் இல்லை. அதேபோல் அரசும் பெரிய அளவில் வைரசுக்கு எதிரான பணிகளை மேற்கொள்ளவில்லை.

டெல்லி எப்படி
இந்த கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் டெல்லியில் 7 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேறு எங்கு
ஹரியானாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மொத்தம் 14 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.அவர்கள் எல்லோரும் இத்தாலியை சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். லடாக்கில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் எப்படி
ஆந்திர பிரதேசத்தில் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார். மொத்தமாக இந்தியாவில் 126 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

விஜயபாஸ்கர் எப்படி
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சென்னை விமான நிலையத்தில் கடுமையான சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் நோய் அறிகுறி உள்ள பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பாக தீவிரமாக கொரோனா குறித்த விழிப்புணர்வு பரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு யாருக்கும் வைரஸ் தாக்குதல் இல்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications