Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா - சீனா இடையே வெடித்த மோதல்.. மீண்டும் மோசமாகும் உறவு.. பாகிஸ்தானால் வந்த புதிய பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - சீனா இடையேயான உறவு தற்போது மீண்டும் வலுப்பெற தொடங்கி உள்ளது. ஆனால் பாகிஸ்தானை காரணம் காட்டி சீனா மீண்டும் நம்மை சீண்ட தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் இந்தியா - சீனா இடையே பிரச்சனை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை சீனாவிடம் இருந்து தான் வாங்கி வருகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் பல்வேறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த சீனா பல ஆயிரம் கோடி பணத்தை செலவிட்டு வருகிறது.

அதில் ஒரு திட்டம் தான் சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China - Pakistan Economic Corridor). இது இருநாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலான சாலை திட்டமாகும். சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள காஷ் நகரில் இருந்து பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகம் வரை மொத்தம்3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு இருநாடுகள் இடையே சாலை வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான பணி பாகிஸ்தானில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் இந்த திட்டம் நம் நாட்டுக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு முதலில் நம் நாட்டுக்கு சொந்தமாக இருந்தது.

1948 ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அதனை ஆக்கிரமித்தது. 1963ல் அந்த பகுதியை சீனாவிடம், பாகிஸ்தான் ஒப்படைத்தது. தற்போது அந்த இடம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஷாக்ஸ்காமில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புகள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பாகும். இதனை கைவிட வேண்டும் என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவ் நிங் கூறுகையில், ‛‛ஷாக்ஸ்காம் சீனாவின் அங்கமாக உள்ளது. சொந்த நாட்டில் உள்கட்டமைப்புகளை உருவாக்குது நம் நாட்டின் உரிமை. அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. 1960களில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை ஒப்பந்தம் கையெழுத்தாகி எல்லை வரையறுக்கப்பட்டது. இது இறையாண்மை கொண்ட இரு நாடுகளின் உரிமை. சீனா - பாகிஸ்தான் பொருளாதார காரிடார் என்பது இருநாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான கூட்டு திட்டமாகும். காஷ்மீர் விவகாரம் குறித்த சீனாவின் நிலைப்பாட்டிற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு மாறாது'' என்று கூறியுள்ளார்.

அதேவேளையில் இதனை இந்தியா ஏற்க மறுத்துள்ளது. இதுதொடர்பாக நம் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்திய பகுதி. 1963 ஆம் ஆண்டின் சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது.

மேலும் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த நம்நாட்டின் பகுதி வழியாக சீனா - பாகிஸ்தான் பொருளாதார காரிடார் செல்வதால் அதனை அங்கீகரிக்கப்போவது இல்லை. ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இதை பாகிஸ்தான் மற்றும் சீனா இரு நாடுகளுக்கு பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம்'' என்று கூறியிருந்தார். இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் வலுக்க தொடங்கி உள்ளது.

இந்தியா - சீனா இடையேயான உறவு கடந்த 2025ம் ஆண்டில் மோசமானது. கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதால் இருநாடுகள் இடையே பிரச்சனை வந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு தான் பிரதமர் மோடி சீனா சென்றார். ஷாங்காய் ்ஒத்துழைப்பு மாநாட்டிற்காக அவர் சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்பு நடத்தினார்.

இது இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்தியது. இருநாடுகள் இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது. இருநாடுகள் இடையே வர்த்தகம் புத்துயிர் பெற தொடங்கி உள்ளது. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானுக்கான பொருளாதார காரிடார் விஷயத்தில் இந்தியா - சீனா இடையே மோதல் தீவிரமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+