மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
72 வயதாகும் சீதாராம் யெச்சூரி சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர்களது பெற்றோர் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ஆவார். சீதாராம் யெச்சூரி மாணவ பருவத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பல ஆண்டுகள் மாநிலங்களின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட சீதாராம் யெச்சூரிக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு டெல்லி எய்மஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார்.
சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனயே அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அங்கு அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு உடல் நிலையில தீவிரமான பாதிப்பு இல்லை என்றும், நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு சமீபத்தில் தான் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications