Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

320 ஆக உயர்ந்த சர்க்கரை அளவு.. திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு முதல் முறையாக இன்சுலின் ஊசி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 360 வதாக அதிகரித்தது. இதையடுத்து அவருக்கு சிறையில் வைத்தே இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.

Delhi CM Arvind Kejriwal administered insulin at Tihar jail after his blood sugar level soared to 320

அரவிந்த் கெஜ்ரிவால்: தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவருக்கு இன்சுலின் ஊசி, வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை நிர்வாகம் மறுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது. மேலும் தனக்கு இன்சுலின் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இன்சுலின் மருந்து: இந்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 350 க்கு மேல் சென்றது. இதனால், சிறைக்கு சென்ற பின் முதல் முறையாக இன்சுலின் செலுத்தப்பட்டது. நேற்று இரவு கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் வகையில் இன்சுலின் ஊசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி சபிக்கிறது: இது தொடர்பாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவருமான சவுரவ் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கெஜ்ரிவால் சொன்னது சரி என்பது இன்று தெளிவாகியுள்ளது. அவருக்கு இன்சுலின் தேவைப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசு அதிகாரிகள் வேண்டும் என்றே அவருக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். பாஜகவினரிடம் சொல்லுங்கள்.. அவருக்கு இன்சுலின் தேவை இல்லையென்றால் இப்போது ஏன் கொடுத்தீர்கள்.. ஏனெனில் மொத்த உலகமும் அவர்களை சபிக்கிறது" என்றார்.

முன்னதாக கெஜ்ரிவால், தனக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருப்பதாகவும் இதனால், தனது குடும்ப மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, "மாம்பழம் உள்ளிட்ட அதிக இனிப்புள்ள உணவுப் பொருட்களை கெஜ்ரிவால் சாப்பிடுவதாகவும் இதனால் சர்க்கரை அளவு அதிகமானால் அதைக் காரணமாகக் கூறி ஜாமீன் பெற அவர் முயற்சிக்கிறார் என்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டது.

மருத்துவர் ஆலோசனைப்படி: இதனை கெஜ்ரிவால் தரப்பு மறுத்து இருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தனியார் மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் காணொலி மூலம் ஆலோசனை பெற கெஜ்ரிவாலுக்கு அனுமதி கொடுக்க முடியாது. எனினும், கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும்.

சர்க்கரை நோய் நிபுணர்களைக் கொண்டு அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், தான் நேற்று இரவு கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட்டுகள் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+