Delhi CM attack: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்.. தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிய ஆசாமி! பரபரப்பு
டெல்லி: மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது அடையாளம் தெரியாத ஒருவர் தாக்குதல் (Delhi CM attacked) நடத்தியுள்ளார். மனு கொடுக்க வந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், திடீரென ரேகா குப்தாவை நோக்கி கத்தி சத்தம் போட்டுள்ளார். அப்போது தான் அந்த நபர் ரேகா குப்தாவை தாக்கியதாகவும் அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா இருக்கிறார். அவர் இன்று காலை அவர் தனது இல்லத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களைச் சந்தித்து வந்தார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வந்தார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத ஒருவர் அவரை தாக்கியுள்ளார். இது தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி முதல்வர் தாக்குதல்
குற்றஞ்சாட்டப்பட்டவர் முதலில் ரேகா குப்தாவிடம் சில ஆவணங்களை வழங்கியுள்ளார். அதன்பின்னர், சத்தம் போட்டுக்கொண்டு, கூச்சலிட்டபடி முதல்வரைத் தாக்கியுள்ளார். அந்த ஆசாமி ரேகா குப்தாவின் தலைமுடியை பிடித்து இழுத்தாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர் இப்போது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தலை முடியை இழுத்து
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், "இது மிகவும் தவறான விஷயம். மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பங்கேற்கும் உரிமை உள்ளது. ஒரு நபர் இப்படி முதல்வரைத் தாக்குவது ஒரு தவறான விஷயம். நான் அங்கேயே இருந்தேன். மனு கொடுக்க வந்த அந்த நபர் திடீரென சத்தம் போட்டு கூச்சலிட்டார். அப்போது அவர் முதல்வரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை பிடித்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.
இது குறித்து விசாரிக்க, துணை காவல் ஆணையர் முதல்வர் ரேகா குப்தாவின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவ பரிசோதனைக்காக ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரேகா குப்தா நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

யார் அந்த நபர்
இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த நபர் ராஜேஷ் கிம்ஜி என்று அடையாளம் கண்டுள்ளது. இவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.. அவரது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளராம். அது தொடர்பாகவே ரேகா குப்தாவை அந்த நபர் சந்திக்க வந்ததாக கூற்பபடுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இச்சம்பவத்திற்கு டெல்லி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய சம்பவங்களை எவ்வளவு கண்டித்தாலும் அது போதாது. இந்தச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. டெல்லி முதல்வரே பாதுகாப்பாக இல்லை என்றால், சாமானிய ஆண், பெண் எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும்?" என்று அவர் கேள்வியெழுப்பினார். அதேபோல ஆம் ஆத்மி கட்சியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications