ரோட்டில் நமாஸ் செய்த 2 பேரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி! கடும் வாக்குவாதம்.. பாய்ந்த ஆக்ஷன்
டெல்லி: மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரோட்டில் நமாஸ் செய்த இஸ்லாமியர்களை ஆக்ரோஷமாக போலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீஸ்காரரை சூழ்ந்து வாக்குவாதம் செய்த நிலையில் அவர் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமையாகும். இஸ்லாமியர்களை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை தொழுகை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தியா முழுவதும் உள்ள மசூதிகளில் இன்று மதியம் வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

டெல்லி இன்டர்லாக் பகுதியில் உள்ள மசூதியல் வழக்கத்தை விட அதிகளவில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக கூடினர். இதனால் மசூதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் அந்த பகுதியில் உள்ள ரோட்டில் தொழுகை நடத்தினர்.
இதுபற்றி அறிந்தவுடன் போலீஸ்காரர்கள் அங்கு சென்றனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் தொழுகையில் மும்முரமாக இருந்தனர். இதனால் ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரி தொழுகை செய்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்தார். 2 பேரை எட்டி உதை்த போலீஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தில் கையால் தாக்கினார்.

இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் ஒன்று கூடி போலீஸ் அதிகாரியின் செயலை கண்டித்தனர். மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த வீடியோவை காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி இம்ரான் பிரதாப்கார்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
पुलिस का काम है सामाजिक सौहार्द बनाकर रखना लेकिन यह दिल्ली पुलिस नमाज़ पढ़ते लोगों को लात मार रही है।सबके धर्म का सम्मान करना सीखिए।शर्मनाक घटना pic.twitter.com/AhTMO9EWWi
— Aadesh Rawal (@AadeshRawal) March 8, 2024
இதுபற்றி அவர், ‛‛அடிப்படை மனிதாபிமானம் என்பது பற்றி அறியாமல் இந்த டெல்லி போலீஸ்காரர் நமாஸ் செய்த நபரை எட்டி உதைத்துள்ளார். இவரது இதயத்தில் நிறைந்திருக்கும் இந்த வெறுப்பு என்ன?. இவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதோடு, பணி நீக்கம் செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.
இதுபற்றி டெல்லி வடக்கு துணை போலீஸ் ஆணையர் எம்கே மீனா கூறுகையில், ‛‛இந்த சம்பவம் தொடர்பான விசாரணை என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ்காரர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது'' என்றார். இந்த சம்பவத்தால் டெல்லி இன்டர்லாக் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications