Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்பே சொன்ன டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.. 8 மணி நேரத்தில் கைது செய்த சிபிஐ.. பரபர பின்னணி!

மணீஷ் சிசோடியா 8 மணி நேர விசாரணைக்குப் பின் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டெல்லி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது சிபிஐ. புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மணீஷ் சிசோடியா இன்று காலை சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னதாக, தன்னை மோடி போலி வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறார் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்ற நிலையில், சிபிஐ விசாரணை தொடர்ந்து வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. புதிய கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

வாபஸ் பெற்றது

வாபஸ் பெற்றது

மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

9 பேர் கைது

9 பேர் கைது

மதுபான கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

கேசிஆர் மகள்

கேசிஆர் மகள்

இந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சியுமான கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

 மோடி பயப்படுகிறார்

மோடி பயப்படுகிறார்

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் சிசோடியா. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஏழெட்டு மாதங்கள் சிறையில் இருந்தால் கூட, என்னை நினைத்து வருத்தப்படாதீர்கள். பெருமை கொள்ளுங்கள். பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயப்படுகிறார். எனவே, என்னை ஒரு போலி வழக்கில் சிக்க வைக்க விரும்புகிறார்" எனக் குற்றம்சாட்டினார்.

பரபர கைது

பரபர கைது

இந்நிலையில், 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது சிபிஐ. இது ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் விசாரணைக்கு ஆஜராகும் முன்பே நான் சிறையில் தள்ளப்படலாம் என மணீஷ் சிசோடியா கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் அரசியல் பழிவாங்கல் என ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இன்னொரு விவகாரம்

இன்னொரு விவகாரம்

எதிர்க்கட்சிகளை சிறப்பு பிரிவு (FBU) மூலம் உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா மீது விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் சிபிஐக்கு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது. சிபிஐ அறிக்கையைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில், உள்துறை அமைச்சகம் இதில் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+