Delhi Exit Poll 2025: 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்கிறதா பாஜக? NDTV வெளியிட்ட கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் 51 முதல் 60 தொகுதிகளை வென்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று என்டிடிவி கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்கள் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமாக 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் என்று 3 கட்சிகளும் நேரடி போட்டியில் உள்ளன.

delhi exit polls 2025 delhi election exit poll results 2025

டெல்லியை பொறுத்தவரை 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 83.76 லட்சம் ஆண் வாக்காளர்கள், 72.36 லட்சம் பெண் வாக்காளர்கள் மற்றும் 1,267 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இன்று சுமார் 60 சதவிகித்த்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், டெல்லி மக்களின் மனநிலை என்ன என்பதைக் காட்டும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம். அதன்படி தேர்தல் முடிவடைந்த அரை மணி நேரத்திற்கு பின் என்டிடிவி நிறுவனம் தரப்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெயிடப்பட்டுள்ளன.

அதன்படி என்டிடிவி கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் பாஜக 51 முதல் 60 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒரு இடம் கூட கிடைககது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆண்டுகளாக பாஜக டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து வருகிறது. கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆட்சியில் இருந்தன. தற்போது பாஜக ஆட்சிக்கு வரவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+