Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே 22 முதல் சாரதாவை பார்க்கவே இல்லைனு சாதித்த அப்தாப்.. தட்டி தூக்கிய போலீஸ்! கிடைத்த முக்கிய துப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சாரதாவை அப்தாப்தான் கொலை செய்தார் என்பதை போலீஸார் எப்படி கண்டறிந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வசாய் பகுதியை சேர்ந்தவர் சாரதா வாக்கர். இவருக்கு 26 வயது. இவர் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பம்பிள்ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கடந்த 2019 இல் மும்பையை சேர்ந்த அப்தாப் பூனாவாலா அறிமுகமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் ஒரே கால் சென்டரில் பணிபுரிய தொடங்கினர். இதையடுத்து நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு எழுந்தது.

வெவ்வேறு சமூகம்

வெவ்வேறு சமூகம்

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் சில மாதங்களுக்கு முன் சாரதாவை அப்தாப் டெல்லிக்கு அழைத்து வந்தார். அங்கு மெஹ்ராலி பகுதியில் ஒரு வீடு எடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அப்தாப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாரதா கேட்டிருக்கிறார்.

சாக்கு போக்கு

சாக்கு போக்கு

ஒவ்வொரு முறையும் சாக்கு போக்கு சொல்லி தவிர்த்து வந்த அப்தாப்பிடம் ஒரு நாள் கட் அன்ட் ரைட்டாக கேட்டுள்ளார் சாரதா. இதனால் ஆத்திரமடைந்த அப்தாப், சாரதாவின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் உயிர் பிரிந்தது. பின்னர் அவரது உடலை ரம்பத்தை கொண்டு 35 பாகங்களாக துண்டித்துள்ளார். அவற்றை பாதுகாக்க 300 லிட்டர் பிரிட்ஜை வாங்கியுள்ளார்.

உடல் பாகங்கள்

உடல் பாகங்கள்

அதில் உடல் பாகங்களையும் தனியாக தலையையும் வைத்துள்ளார். தினந்தோறும் அதிகாலை 2 மணி அளவில் அந்த உடல்பாகத்தில் சிலவற்றை எடுத்துக் கொண்டு வனப்பகுதிகளுக்கு நடந்தே சென்று வீசிவிட்டு வருவது வழக்கம். இதனிடையே சாரதாவை பேஸ்புக்கிலும் காணவில்லை, அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் என்பதால் அப்தாப் மீது சாரதாவின் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது.

துண்டு துண்டாக வெட்டி

துண்டு துண்டாக வெட்டி

இதையடுத்து போலீஸில் எழுந்த புகாரின் பேரில் துண்டு துண்டாக கிடந்த உடல்கள் சாரதாவினுடையது என தெரியவந்தது. இதையடுத்து அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையில் சம்பவத்தன்று சாரதாவின் உடல்களை வெட்டும் போது அப்தாபின் கையில் ஆழமான காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. இதையடுத்து ரத்த கறையுடன் மருத்துவரிடம் சென்ற போது அவர் கேட்ட போது சமையல் செய்யும் போது கத்தி வெட்டிவிட்டது என பொய் கூறியுள்ளார். மருத்துவரும் இதை நம்பிவிட்டார்.

20 ஆண்டுகள் மும்பையில் வசித்த அப்தாப்

20 ஆண்டுகள் மும்பையில் வசித்த அப்தாப்

அப்தாப் ஒரு சமையல் கலைஞர். இதனால் இவர் கத்தியை பயன்படுத்தும் நுணுக்கங்களை கற்றிருந்தார். இதனால்தான் மாமிசத்தை வெட்டுவது போல் சாரதாவின் உடலை கிரைம் தொடர் பார்த்தபடியே துண்டு துண்டாக வெட்டியுள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வருகிறார். அதில் உணவின் உயர்தர புகைப்படங்களை விவரிக்கும் வகையில் 601 பதிவுகளை போட்டுள்ளார். மும்பையில் 20 ஆண்டுகளாக வசித்த அப்தாபுக்கு இந்தியே தெரியாதாம். தற்போது வரை ஆங்கிலத்தில்தான் பேசி வருகிறார். சாரதா சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். தினந்தோறும் ஏதாவது போஸ்ட்களை போட்டபடி இருப்பார்.

இன்ஸ்டா பக்கம்

இன்ஸ்டா பக்கம்

கடந்த மே மாதம் சாரதாவை கொன்ற நிலையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை அவரது நண்பர்கள் நம்புவதற்காக சாரதாவின் இன்ஸ்டா பக்கத்தை அப்தாப் பயன்படுத்தி போஸ்ட் போட்டுள்ளார். ஒரு மாதங்கள் இது போல் செய்த நிலையில் ஜூன் மாதம் முதல் எந்த போஸ்ட்களும் வராததால் சாரதாவுக்கு ஏதோ ஆபத்து என நண்பர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. ஏற்கெனவே தன்னை அப்தாப் கொடுமைப்படுத்துகிறார். அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார் என தனது மும்பை தோழியிடம் சாரதா கூறியிருந்தார்.

 தோழியிடம் கலங்கிய சாரதா

தோழியிடம் கலங்கிய சாரதா

மேலும் அப்தாப் என்னை கொன்றுவிடுவார் என்ற அச்சம் இருப்பதாகவும் சாரதா தெரிவித்துள்ளார். இந்த சூழலில் திடீரென சாரதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் நண்பர்கள் சாரதாவின் சகோதரருக்கு தகவல் கொடுத்தனர். இப்படியாக இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்தாப் சாரதாவை கொலை செய்து விட்டு அதிலிருந்து தப்புவது எப்படி என்பது குறித்து கூகுளில் தேடியுள்ளார்.

கிரைம் தொடர்

கிரைம் தொடர்

அமெரிக்க கிரைம் தொடர் டெக்ஸ்டரை பார்த்து சாரதாவின் உடலை அப்தாப் கூறுபோட்டுள்ளார். அந்த தொடர் மூலம் எப்படி உடலை துண்டுகளாக வெட்டுவது, தடயங்களையும் ரத்த கறைகளையும் எப்படி அழிப்பது, உடலை குளியலறையில் எந்த நிலையில் மறைத்து வைப்பது உள்ளிட்ட வழிகளை கூகுளில் தேடியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. சாரதாவின் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியது போல் அவருடைய வங்கிக் கணக்கையும் அப்தாப் பயன்படுத்தியுள்ளார். அது போல் சாரதாவின் கிரெட் கார்டு பில்லையும் அப்தாப் செலுத்தி வந்ததால் வங்கி நிர்வாகம் பணம் கட்டவில்லை என்ற புகாருடன் சாரதாவின் வீட்டுக்கு செல்லவில்லை.

 அப்தாபிடம் சாரதா எங்கே என கேட்ட போலீஸ்

அப்தாபிடம் சாரதா எங்கே என கேட்ட போலீஸ்


அப்தாப்தான் கொலையாளி என்பதை போலீஸார் எப்படி கண்டறிந்தனர் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அப்தாபிடம் சாரதா எங்கே என கேட்டதற்கு அவர் எங்கோ போய்விட்டார் என போலீஸிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடமைகள் இங்கே இருக்கிறதே என கேட்டதற்கு, சாரதா அதையெல்லாம் வைத்துவிட்டு வெறும் செல்போனுடன் எங்கோ போய்விட்டார், அவரை மே 22 ஆம் தேதிக்கு பிறகு தான் தொடர்பு கொள்ளவில்லை என அப்தாப் கூறினார். சாரதாவின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில் கடந்த மே 22 ஆம் தேதியும் மே 26 ஆம் தேதியும் ரூ 54 ஆயிரத்தை சாரதாவின் வங்கிக் கணக்கிலிருந்து தனது கணக்கிற்கு போன் செயலி மூலம் மாற்றியுள்ளார். அவருடைய பாஸ்வேர்ட்டையும் தெரிந்து வைத்திருந்தார். இந்த லொகேஷனை வைத்து ஆராய்ந்த போது அந்த சிக்னல் மெஹராலியில் இருவரும் ஒன்றாக வசித்த வீட்டை காட்டியது. கடந்த மே 22 ஆம் தேதி முதல் தான் சாரதாவை தொடர்பு கொள்ளவில்லை என கூறிய அப்தாபின் வங்கிக் கணக்கிற்கு எப்படி மே 26 ஆம் தேதி பணம் டெபாசிட் ஆகியுள்ளது என்பதால் அப்தாப் மீது போலீஸாருக்கு சந்தேகம் திரும்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+