டெல்லியில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசு.. தடையை மீறி வெடி வெடித்த மக்கள்.. அதிர்ச்சி!
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையை அடைந்துள்ளது. தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
வருடா வருடம் டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். டெல்லி காற்று சுவாசிக்க முடியாத அளவிற்கு மிக மோசமான நிலையை எட்டும். ஒவ்வொரு வருடமும் இது பிரச்சனையானாலும் அரசு இதுவரை காற்று மாசுக்கு தீர்வு காணவில்லை.
பனி காலம் வர வர காற்று மாசு அங்கு உச்சம் தொடும். பொதுவாக தீபாவளிக்கு பின் டெல்லியில் வேகம் எடுக்கும் காற்று மாசு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்தியாவில் நிலவில் மிகப்பெரிய காலநிலை பிரச்சனைகளில் ஒன்றாக டெல்லியின் காற்று மாசு பார்க்கப்படுகிறது.

டெல்லி
இந்த நிலையில்தான் கடந்த முறையை போல இந்த முறையும் டெல்லியில் காற்று மாஸை கட்டுப்படுத்த தீபாவளி அன்று வெடிவெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் பொது இடங்களில் வெடி வெடிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. பல்வேறு இடங்களில் டெல்லியில் வெடிகளை விற்றவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வெடி
இருப்பினும் தடையை மீறி டெல்லியில் பல இடங்களில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் காற்றின் மாசு அளவு நேற்று இரவு 8 மணி அளவில் 380 புள்ளிகளை தொட்டது. இது மோசமான அளவு ஆகும். அதாவது இந்த நிலையை எட்டினால் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். இன்று அதிகாலை பனிப்பொழிவு, புகை மண்டலம், ஈரப்பதம் காரணமாக காற்று மாசு மேலும் அதிகரித்தது.
Recommended Video

600 புள்ளிகள்
அதன்படி இன்று அதிகாலை நிலவரப்படி டெல்லியில் பல பகுதிகளில் காற்று மாசு அளவு 600 புள்ளிகளை தாண்டியது. இது அபாயகரமான அளவு ஆகும். ஜன்பத் பகுதியில் காற்று மாசு அளவு 655.07 புள்ளிகளை தொட்டது. காற்று மாசு இவ்வளவு மோசமான புள்ளிகளை தொடுவதால் மக்கள் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும். இதனால் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுவாசம்
டெல்லியில் இதனால் பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. அதேபோல் வயதானவர்களுக்கு கண் எரிச்சல், இருமல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காற்று மாசு அளவு அங்கு போக போக மோசம் அடையும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications