தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்!
டெல்லி: தமிழ்நாட்டில் டிஜிபி நியமனம் தொடர்பாக தலைமைச் செயலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. தகுதியுள்ள அதிகாரிகள் பட்டியல் UPSC-க்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பட்டியலை ஆய்வு செய்ய வரும் 20 ஆம் தேதி தேர்வுக்குழு கூட்டம் நடக்க இருப்பதாக UPSC தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 2025 ஆகஸ்ட் 31 ல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகத் தமிழக காவல்துறை 'பொறுப்பு' டி.ஜி.பி-யின் தலைமையிலேயே இயங்கி வருகிறது. தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, நிரந்தர டிஜிபியை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கிஷோர் கிருஷ்ணசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அரசின் தவறு. புது டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசுக்கு கடைபிடிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு சார்பில், டிஜிபி பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. யுபிஎஸ்சியில் சில குழப்பம் நிலவுகிறது. டிஜிபி இல்லாததால், தேர்வுக்குழுவில் கூடுதல் உள்துறை செயலாளரை இணைக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதற்கு யுபிஎஸ்சி ஏற்கவில்லை. டிஜிபி தேர்வு செய்பவர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்கவேண்டும் என நிபந்தனை சேர்க்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமை செயலாளர், மற்றொருவர், டிஜிபி இல்லாதபட்சத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் குழுவில் இடம் பெற வேண்டும். டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர், சட்டம் ஒழுங்கு, உள்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்ற விதி தமிழகத்துக்கு தளர்த்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கான பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை பரிசீலனை செய்து யுபிஎஸ்சி தேர்வு செய்து புதிய டிஜிபி பெயரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தகுதியுள்ள அதிகாரிகள் பட்டியல் UPSC-க்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பட்டியலை ஆய்வு செய்ய வரும் 20 ஆம் தேதி தேர்வுக்குழு கூட்டம் நடக்க இருப்பதாக UPSC தெரிவித்துள்ளது. இந்த விளக்கங்களை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications