ஜனாதிபதிக்கான மாத ஊதியம் முதல் சொகுசு கார் வரை இத்தனை வசதிகளா?.. முழு விவரம்!
டெல்லி: நாட்டின் முதல் குடிமகனாக தேர்வு செய்யப்படும் குடியரசுத் தலைவரின் ஊதியம் எவ்வளவு, அவருக்கான சலுகைகள் என்னென்ன, தகுதிகள் யாவை என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
நாட்டின் குடியரசுத் தலைவர்தான் முதல் குடிமகனாக அறியப்படுகிறார். இந்த பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் குடியரசுத் தலைவரின் ஊதியம், தகுதிகள், அவருககான சலுகைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட
- இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
- 35 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
- மக்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகும் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
- அரசு பணிகளிலோ அல்லது அரசு மூலம் ஆதாயம் பெறும் பணிகளிலோ இருப்பவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இவை எல்லாவற்றையும் பூர்த்தி செய்தால் மட்டுமே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடியும்.
குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ 5 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இதர ஊக்கத் தொகைகளும் வழங்கப்படும். இந்திய குடியரசுத் தலைவரின் ஊதியத்தை வரையறுக்கும் சட்டத்தின் பெயர் ஜனாதிபதியின் சாதனை மற்றும் ஓய்வூதிய சட்டம் 1951 ஆகும். நாட்டிலேயே குடியரசுத் தலைவர்தான் அதிக ஊதியம் பெறும் நபராவார்.
கடந்த 2018 வரை குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ 1.50 லட்சமாக இருந்த நிலையில் அந்த ஆண்டு முதல் ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இரண்டாவது பிரிவின்படி இந்திய குடியரசுத் தலைவருக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட வேண்டும். கடந்த 1998ஆம் ஆண்டு இந்த தொகை ரூ 50ஆயிரமாக உயர்ந்தது.

நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் குடியரசுத் தலைவர் உலகிலேயே மிகப் பெரிய மாளிகையில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் முகவரி ராஷ்டிரபதி பவன், குடியரசுத் தலைவர் எஸ்டேட், டெல்லி- 1100044. இந்த கட்டடம் முதலில் இந்திய வைஸராய் இல்லம் என அழைக்கப்பட்டது. பின்னர் ராஷ்டிரபதி பவன் - குடியரசுத் தலைவர் மாளிகை என பெயர் மாற்றப்பட்டது.
இந்த கட்டடம் 1929 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த மாளிகையின் பிரதான கட்டடத்தில் மட்டும் 340 அறைகள் உள்ளன. இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு 320 ஏக்கராகும். இதில் குடியரசுத் தலைவர் அலுவலகம், வீடு, விருந்தினர் மாளிகை, ராஷ்டிரபதி பவன் அலுவலகம், பாதுகாப்பு படையினர், ஊழியர்களின் தங்குமிடம் என அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்த மாளிகையில் 5 ஏக்கர் பகுதி H வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதை கட்டியவர்கள் சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகியோர் ஆவர். டெல்லியில் உள்ள மாளிகை மட்டுமல்லாமல் இந்தியாவில் வடக்கு பகுதியிலும் தெற்கு பகுதியிலும் ஓய்வெடுக்க பங்களாக்கள் உள்ளன. அவற்றில் சிம்லாவில் மஷோப்ரா பகுதியில் 10,628 சதுர அடியிலும் ஹைதராபாத்தில் போலாரம் பகுதியில் 90 ஏக்கரிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா இருக்கின்றன.
நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட காரை பயன்படுத்துவார். அவர் பயன்படுத்தும் காரின் மாடல், மேக், பதிவு எண்கள் குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகம் ரகசியமாக வைத்திருக்கும். இன்னும் சொல்ல போனால் குடியரசுத் தலைவரின் காரில் பதிவு எண் இருக்காது. அவரது காரில் அசோக சக்கரம் மட்டுமே இருக்கும். தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 2021 இல் புதிய காரை பெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக புதிய காரை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு இறுதியாக கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்திற்கு முன்னர்தான் மெர்சிடிஸ் மேபக் எஸ் 600 புல்மேன் கார்டு என்ற காரை பெற்றார்.
குடியரசுத் தலைவருக்கான கார் ஏவுகணைகள், கைத்துப்பாக்கிகள், ராணுவ துப்பாக்கிகள், அணுகுண்டுகள், வெடிப் பொருட்கள், வாயு தாக்குதல் உள்ளிட்டவற்றின் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் இருக்கும். இதற்கு முன்னர் இருந்த குடியரசுத் தலைவர்கள் கேடிலாக்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட கார்களை பயன்படுத்தியிருந்தனர்.
குடியரசுத் தலைவருக்கு President's Body Guard பாதுகாப்பை அளிக்கிறார்கள். இந்த படையினர் இந்திய ராணுவத்தின் பழமை வாய்ந்த படை பிரிவாகும். குதிரை பாதுகாப்பு படையும் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. இந்த படையினர் குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு பணியை மட்டுமல்லாமல் போரின் போதும் பணியமர்த்தப்படுவர்.
Recommended Video
குடியரசுத் தலைவர் ஓய்வு பெற்றால் அவருக்கு மாதந்தோறும் ரூ 1.5 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். குடியரசுத் தலைவரின் கணவருக்கோ மனைவிக்கோ மாதம் ரூ 30 ஆயிரம் வழங்கப்படும். அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட வாடகை இல்லாத ஒரு பங்களா அவர் ஓய்வு பெற்றவுடன் வசிக்க கொடுக்கப்படும். செல்போன், இரு லேண்ட்லைன்கள் வழங்கப்படும். 5 ஊழியர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம். ஒரு துணையுடன் ரயில், விமானங்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் வசதியும் கொடுக்கப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications