சந்திரயான் 3 பின்னணியில் 54 பெண் விஞ்ஞானிகள்.. மிஷனின் முக்கிய முகமான இன்னொரு பெண்.. யார் இவர்?
டெல்லி: சந்தியரான் 3 திட்டத்தில் 54 பெண் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பணியாற்றிய நிலையில் ரிது கரிதால் என்ற ஒரு பெண் அந்த குழுவை தலைமையேற்று நடத்தியுள்ளார். இவர் மங்கல்யான் திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய சந்திரயான் 3 என்ற விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி மதியம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி பூமியிலிருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான்- 3 புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் பயண பாதை மாற்றப்பட்டது. 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் சந்திரயான் 3 நுழைந்து. இதையடுத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரோவர் பயணித்து வந்தது. லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று காலை முதலே லேண்டரை தரையிறக்குவதற்கான வேலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு லேண்டரை தரையிறக்கும் பணியை விஞ்ஞானிகள் தொடங்கினர்.
லேண்டரிலிருந்து தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு லேண்டர் நிலவை நோக்கி பயணித்தது. இதையடுத்து தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து இந்தியாவும் நிலவில் கால் பதித்துள்ளது. இந்த சந்திரயான் 3 திட்டத்தில் 54 பெண் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பேக் என்ட்டில் பணியாற்றி சாதனை புரிந்துள்ளனர்.
அந்த வகையில் ரிது கரிதால் எனும் பெண் விஞ்ஞானி சந்திரயான் திட்டத்திற்கு தலைமை வகித்துள்ளார். அவர் மூத்த விஞ்ஞானி. இவர் சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய முகமாக இருக்கிறார். இவர் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்வெளித் திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். ரிது கரிதால் லக்னோ பல்கலைக்கழகத்தில் 1996 ஆம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் எம்டெக் பயின்றார். இதைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த ரிது, பல்வேறு திட்டங்களிலும் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். இதுவரை 20க்கும் மேற்பட்ட சர்வதேச இதழ்களில் இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. இவர் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என அழைக்கப்படுகிறார்.
2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய வழிகாட்டு நிபுணராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2015 இல் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி என்ற விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுள்ளார். 2015 இல் மங்கல்யான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்காகவும் இவர் தனது குழுவினருடன் கவுரவிக்கப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு சந்திரயான் 2 திட்ட இயக்குநர் வனிதாவுடன் மிஷன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். தற்போது சந்திரயான் 3 திட்டம் ரிதுவின் தலைமையின் கீழ் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications