டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பத் திரும்ப தன் நன்றியுணர்ச்சியை நிரூபிக்கும் நாய்.. இந்த வீடியோவ பாருங்க உங்களுக்கே புரியும்!

மாற்றுத்திறனாளி சிறுவனின் சக்கர நாற்காலியை நாய் ஒன்று தள்ளிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில், மாற்றுத்திறனாளி சிறுவனின் சக்கர நாற்காலியை நாய் ஒன்று தள்ளிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

    திரும்பத் திரும்ப தன் நன்றியுணர்ச்சியை நிரூபிக்கும் நாய்.. இந்த வீடியோவ பாருங்க உங்களுக்கே புரியும்!

    மறைந்த இயக்குனர் ராமநாராயணன் படங்களில், நாய், பூனை, யானை, குரங்கு, கிளி, நாகபாம்பு போன்ற விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும். படத்தின் நாயகன், நாயகிக்கு அவை மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    Dog pushes the wheelchair of a specially-abled boy in a viral video

    கண்ணாமூச்சி விளையாடுவது, பொருட்களை தூக்கி வருவது, வில்லனை பழி வாங்க உதவி செய்வது என அந்த விலங்குகள் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த விலங்குகளுக்காகவே பல படங்கள் வெற்றி விழா கண்டிருக்கின்றன.

    அதுபோல் ராமநாராயணன் படங்களில் வருவது பொய்யல்ல, நிஜம் தான் என நிரூபித்திருக்கிறது ஒரு நாய். பொதுவாக மனிதனின் உற்ற தோழன் நாய்கள் தான் என்பார்கள். அதனை மீண்டும் ஒருமுறை உண்மையாக்கி இருக்கிறது இந்த நாய்.

    திருமலையில் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் - ஏழுமலையானை எப்போது தரிசிக்க முடியும்திருமலையில் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் - ஏழுமலையானை எப்போது தரிசிக்க முடியும்

    இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா டிவிட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 11 விநாடிகள் ஓடுகிறது. நெரிசல் மிகுந்த ஒரு பகுதியில் மாற்றுத்திறனாளி சிறுவனின் சக்கர நாற்காலியை தனது முன் கால்களால் தள்ளிக்கொண்டு செல்கிறது அந்த நாய்.

    இது பழைய வீடியோ தான் என்றாலும், மீண்டும் ஒருமுறை வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த நாயை பாராட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு நாயை பாராட்டாமல் இருக்க முடியுமா?

    English summary
    A video of dog pushing wheelchair of specially-abled boy goes viral in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X