ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லியில் குலுங்கிய வீடுகள்! மக்கள் அச்சம்!
டெல்லி: இன்று இரவு, டெல்லி-என்சிஆர் முழுவதும் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதன் அதிர்வுகள் வட இந்தியா முழுக்க உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதி மக்கள் அதிர்வுகளால் வீடுகளை விட்டு வெளியேறினர். இதுவரை உயிரிழப்புகள், கட்டிடங்கள் சேதம் பதிவாகவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) அறிக்கையின்படி, நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் ஜுர்ம் அருகே பதிவாகியிருக்கிறது. ரெட் கிராஸ் கூற்றுப்படி, இந்து குஷ் மலைப்பகுதி தீவிர நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படுகின்றன.

இந்திய-யுரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதல் மண்டலத்தில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் நிலநடுக்க அபாயத்தில் உள்ளது. ஹெராட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பெரிய புவிப்பிளவுக்கோடு செல்வதும் இந்த அச்சுறுத்தலை அதிகரிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் (UNOCHA) தகவல்படி, ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம், நிலச்சரிவுகள், பருவமழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தேசமாகும்.












Click it and Unblock the Notifications