நேஷனல் ஹெரால்டு வழக்கு! சோனியா காந்தியிடம் முதல் நாள் விசாரணை ஓவர்! ஜூலை 25இல் மீண்டும் ஆஜராக சம்மன்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இந்த பரிவர்த்தனையில் முறைகேடு நடந்துள்ளதாகச் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
ஏனென்றால் யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அமலாக்கத் துறை இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்தது.

நெஷ்னல் ஹெரால்டு
இந்த அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அந்தச் சமயத்தில் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். இதனால் ராகுல் காந்தியிடம் மட்டும் சில நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. 5 நாட்களில் மொத்தம் 50 மணி நேரத்திற்கும் மேலாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

சோனியா காந்தி
75 வயதான சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று அமலாக்க இயக்குநரகத்தில் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜரானார். ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திய உதவி இயக்குநர் குல்தீப் சிங் தலைமையில் டீம் தான் சோனியா காந்தியிடமும் கேள்வி எழுப்பியது. சுமார் 3 மணி நேர விசாரணைக்குப் பின்னர், மதிய உணவுக்காக அவருக்கு பிரெக் விடுக்கப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணை
விசாரணை நடைபெற்ற சமயத்தில் அவரது மகள் பிரியங்கா காந்தி அதே கட்டிடத்தில் காத்திருந்தார். ராகுல் காந்தியிடம் பல மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரிடம் விரைவிலேயே விசாரணை முடித்துக் கொள்ளப்பட்டது. அதேநேரம் அவரை வரும் ஜூலை 25ஆம் தேதி, திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கோரிக்கை
இந்த விசாரணை சமயத்தில் சோனியா காந்தி அமலாக்கத் துறையிடம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சோனியா காந்தி அவரை விசாரிக்க விசாலமான மற்றும் காற்றோட்டமான அறையைக் கோரியதாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னுடன் தொடர்பு கொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கொரோனா பரிசோதனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட சமயத்தில் ஒவ்வொரு சுற்றுக் கேள்விகளுக்கும் பிறகு, வாக்குமூலத்தில் கையெழுத்திடும் போது அவர் பதில்களைச் சற்று மாற்றிக் கூறி உள்ளார். இதன் காரணமாகவே ராகுல் காந்தியிடம் விசாரணை தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது அதேநேரம் மத்திய அரசு வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் விசாரணை என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர்களைத் துன்புறுத்துவதாகக் காங்கிரஸ் சாடி வருகிறது.












Click it and Unblock the Notifications