டெல்லியில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி.. டக்கென திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார்!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்ற திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றார். இதன் மூலம் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்ற அவர், முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெற்றார்.

வெற்றி
இதில் திரௌபதி முர்முவுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றார். மொத்தமாக பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பிலான வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பல மாநிலங்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் எம்எல்ஏக்களே திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர்.

வாழ்த்து
திரௌபதி முர்மு திங்கள்கிழமை நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்க உள்ளார். நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெறப்போகும் திரௌபதி முர்முவை பலரும் வாழ்த்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி அறிவிக்கப்பட்ட உடனேயே நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
இதற்கிடையே டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக மூத்த நிர்வாகிகளான ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Recommended Video

நன்றி
மேலும், ராஜ்யசபா உறுப்பினர் என். சந்திரசேகர், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, தனக்கு வாக்களித்த அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு திரௌபதி முர்மு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications