"கலங்கிய" எடப்பாடி பழனிசாமி.. "சொல்லொன்னா துயறுற்றேன், தமிழக பயணிகளுக்கு நிவாரணம் தேவை" என கோரிக்கை
டெல்லி: ஒடிசா ரயில் விபத்தானது நாட்டையே நடுங்க வைத்துள்ளது.. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.. அத்துடன், முக்கிய கோரிக்கை ஒன்றையும் முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களில் பலர் சீரியஸாக இருப்பதாக தெரிகிறது.

ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் எ ன்றும் அஞ்சப்படுகிறது.. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சடலங்கள்: இந்த விபத்தில், நிறைய பேரின் சடலங்கள் பெட்டிகளில் மாட்டிக் கொண்டிருந்துள்ளது.. இதை தங்கள் கண்முன்னாடியே பார்த்ததாக விபத்தை நேரில் சந்தித்தவர்கள் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள்.. வெடிவிபத்தைவிட பயங்கரமான சத்தமாக இருந்திருக்கறது.. பெட்டிகள் எல்லாமே தூள் தூளாக நொறுங்கி உள்ளது..
விபத்து நடந்த பகுதி ஒரு கிராம பகுதி.. இந்த விபத்தில் தமிழக மக்கள் நிறைய பேர் சிக்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. இதுவரை 140 தமிழர்கள் அந்த ரயிலில் பயணம் செய்ததாகவ்ம, இதில் 90 பேர் பத்திரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.. சிலரது செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.. பாதிக்கப்பட்ட தமிழர்களை சிறப்பு ரயில் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடந்துள்ளது.
துக்கம் அனுசரிப்பு: தமிழ்நாட்டில், ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்று அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இதற்காக நடைபெறவிருந்த பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.. இதையடுத்து, ஒடிசாவுக்கும் முதல்வர் விரைவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்வீட்: இந்த ரயில் விபத்து குறித்து, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.. இதுகுறித்து ட்வீட் ஒன்றினையும் எடப்பாடி பதிவிட்டுள்ளார்.

அதில், "கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.
கோரிக்கை: அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமெனவும், இந்த கோர ரெயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும், காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications