புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் கம்பெனியிடம் நன்கொடை பெற்ற கட்சி! தேர்தல் பத்திரத்தில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நன்கொடை விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2019ல் புல்வாமா தாக்குதல் நடந்த சில வாரத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்தியாவில் தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரையிலான விபரங்களை வெளியிட உத்தரவிட்டது.

Electoral Bond Pakistan based company made a hefty donation to political party weeks after the pulwama attack

அதாவது தேர்தல் பத்திர நன்கொடை விபரங்களை எஸ்பிஐ இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் வரும் 15ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்று இரவு இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை தொடர்பான விபரம் என்பது 337 பக்கங்களிலும், கட்சிகள் பெற்ற நன்கொடை விபரம் என்பது 426 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்களின் எண்கள் வெளியிடப்படவில்லை. இதனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை செய்துள்ளார்கள் என்ற விபரம் தெரியவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கட்சிகளுக்க எத்தனை தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நன்கொடை சென்றுள்ளது என்ற விபரத்தை மக்களால் அறிந்து கொள்ள முடிகிறது.

Electoral Bond Pakistan based company made a hefty donation to political party weeks after the pulwama attack

இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2019ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்ப பொறுப்பேற்றது. இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் அதாவது 2019 ஏப்ரல் மாதம் 18 ம் தேதியில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் HUB Power company என்ற நிறுவனத்திடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் கட்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அன்று ஒரே நாளில் இந்த நிறுவனம் மொத்தம் 14 தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கி உள்ளது.

இதில் 5 பத்திரங்கள் மூலம் தலா ரூ.1 லட்சமும், மீதமுள்ள 9 தேர்தல் பத்திரங்கள் மூலம் தலா ரூ.10 லட்சமும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அனைத்தும் ஒரே அரசியல் கட்சிக்கு சென்றதா? இல்லை பல அரசியல் கட்சிகளுக்கு சென்றதா? என்பது தெரியவில்லை. இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+